மனைவியை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை… பரபரப்பை ஏற்படுத்திய போலிஸ் அதிகாரியின் தற்கொலை…
மகாராஷ்டிரா மாநிலத்தில் உதவி போலிஸ் கமிஷ்னர் தன் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் 56 வயதாகும் பாரத் கெய்க்வாட். இவரது மனைவி மோனிகா கெய்க்வாட் ஆவார். பாரத் கெய்க்வாட் அவர்கள் சமீபத்தில் தான் அமராவதி நகரின் துணை காவல் ஆணையாளராக அதாவது ஏ.சி.பி ஆக பணியிட மாறுதல் பெற்றார். துணை காவல் ஆணையாளராக பாரத் கெய்க்வாட் அமராவதி நகரில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று அதாவது ஜூலை 24ம் தேதி மாலை 3.30 மணியளிவில் திடீரென்று தான் வைத்திருந்த சர்வீஸ் துப்பாக்கியை கையில் எடுத்தார். பின்னர் தன் மனைவியை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அங்கு இருந்த உறவினர் தீபக் என்பவரையும் துப்பாக்கியால் சுட்டார்.
பிறகு அதே துப்பாக்கியால் பாரத் கெய்க்வாட் அவர்கள் அவரையே சுட்டார். இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சதூர்சிரிங் காவல் நிலைய போலீஸார் துணை உதவி ஆணையாளர் பாரத் கெய்க்வாட், அவரது மரைவி மோனிஷா கெய்க்வாட், உறவினர் தீபக் மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சதூர்சிரிங் காவல் நிலைய போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். பாரத் கெய்க்வாட் பணிசுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா ஏன் மனைவி மற்றும் உறவினர் ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்தார் என்பதற்கான காரணங்கள் விசாரணையின் முடிவில் தெரியவரும். மனைவி மற்றும் உறவினர் என இரண்டு பேரை சுட்டுக் கொன்றுவிட்டு பாரத் கெய்கவாட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.