Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சூட்கேஸ்களை இனிமேல் இழுத்து செல்லக் கூடாது! அதிரடியாக தடை விதித்து அறிவித்த அரசு!!

சூட்கேஸ்களை இனிமேல் இழுத்து செல்லக் கூடாது! அதிரடியாக தடை விதித்து அறிவித்த அரசு!!

 

இனிமேல் பயணிகள் யாரும் தங்களது சூட்கேஸ்களை இழுத்துச் செல்லக் கூடாது என்று அரசு அதிரடியாக தடை விதித்து அறிவித்துள்ளது. சூட்கேஸ்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை குரேஷ்ய்வில் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

குரேஷியாவின் டுப்ரோவ்னிக் என்ற பகுதிக்கு சுற்றுலாக்கு வரும் பயணிகளுக்குதான் சூட்கேஸ்களை இழுத்துச் செல்வதற்கு தடை விதிகப்பட்டுள்ளது. உலகில் பல இடங்களில் பல வகையான தடைகள் அமலில் இருக்கின்றது. சில இடங்களில் விசில் அடிக்ககூடாது, குறட்டை விடக்கூடாது, ஓடக்கூடாது, நடக்கூடாது, சத்தமாக சிரிக்கக்கூடாது போன்ற பல வித்தியாசமான தடைகள் அமலில்  இருந்து வருகின்றது. அந்த வித்தியாசமான தடைகளில் காரேஷியா நாட்டின் சூட்கேஸ்களுக்கான தடையும் சேர்ந்துள்ளது.

 

குரேஷியாவின் டுப்ரோவ்னிக் என்ற நகருக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு சுற்றுலாவிற்கு வருகிறார்கள். மேலும் டுப்ரோவ்னிக் சாலைகளில் மற்றும் அங்குள்ள சந்துகளில் கற்கள் கொண்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கற்களால் ஆன பாதைகளின் வழியாக சுற்றுலா பயணிகள் தங்களது சூட்கேஸ் பெட்டிகளை தரதரவென்று வேகமாகவும் அதிகம் சத்தம் ஏற்படும் வகையில் இழுத்துச் செல்கின்றனர்.

 

இதனால் ஏற்படும் சத்தம் அங்கு வசிக்கும் மக்களுக்கு தொந்தரவாக இருப்பதாக மக்கள் அனைவரும்.புகார் அளித்தனர். இதையடுத்து மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நகரின் மேயர் சக்கரம் கொண்ட சூட்கேஸ்களை இழுத்துச் செல்ல தடை விதித்து உத்தரவிட்டார்.

 

இந்த தடையை மீறுவோருக்கு 288 டாலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவித்தார். சூட்கேஸ் பெட்டிகளை இழுத்து செல்ல அங்கு விதிக்கப்பட்ட அபராதம் இந்திய மதிப்பில் 23000 ரூபாய் அபராதம் ஆகும்.

 

Exit mobile version