Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருப்பு நிறமாக மாறிய டெஹ்ரான் நகரம்; கதறி அழுத மூத்த தலைவர் !!! டிரம்ப் தலைக்கு 536 கோடி பரிசு ??? உலகின் தலைப்பு செய்தியாகும் ஈரான்

பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தால், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், காசிம் சுலைமானி இறுதி ஊர்வலம் நேற்று  நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஈராக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சுலைமானியின் உடலுக்கு  ஈரான் தலைநகர்  டெஹ்ரானில்  நேற்று  இறுதி சடங்குகள் நடந்தன. அங்குள்ள  ஒரு பல்கலைக்கழகத்தில் அவரது  உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.  சுலைமானியின்  உடலுக்கு  அஞ்சலி  செலுத்துவதற்கு லட்சக்கணக்கான  மக்கள்  அந்த  பகுதியில்  குவிந்தனர். அவர்கள்  அனைவரும் கறுப்பு நிற  உடையில்  வந்திருந்தனர்.  இதனால் டெஹ்ரான்  நகரமே  கறுப்பு நிறமாக  மாறியது  போல  காட்சியளித்தது.  மக்கள்  தங்கள்  கைகளில்  கறுப்பு மற்றும்  ஈரான்  நாட்டு  கொடிகளை  ஏந்தியபடி  அமெரிக்காவுக்கு  எதிராக கோஷங்களை  எழுப்பி பேரணியாகச்  சென்றனர்.

சுலைமானி  உடலுக்கு,  ஈரானின்  மூத்த மத  தலைவர்  அயதுல்லா  அலி காமெனி  தலைமையில்  இறுதி  சடங்குகள்  நடந்தன.  இதில்  அதிபர்  ஹசன் ருஹானி  உள்பட  முக்கிய  தலைவர்கள்  பலரும்  கலந்து  கொண்டனர்.  இறுதி சடங்கின் போது, அயதுல்லா அலி  காமெனி  கண்ணீர்  விட்டுக் கதறி  அழுதார். சுலைமானியின்  இறுதி சடங்கு  நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்நாட்டு ஊடகங்களில் நேரடியாக  ஒளிபரப்பப்பட்டது. பின்னர்  சுலைமானியின்  உடல் பெரிய  வாகனத்தில்  வைக்கப்பட்டு, மக்கள்  வெள்ளத்தில் மிதந்தவாறே கொண்டு  செல்லப்பட்டு  நல்லடக்கம்  செய்யப்பட்டது.

இதற்கிடையே ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றுவது தொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப்,  ஈராக்  மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக ஈரானின் மூத்த அதிகாரி ட்ரம்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியதாவது “ ஈரானில் 8 கோடி மக்கள் வசிக்கின்றனர். எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  டிரம்ப் தலையை  கொண்டு  வருபவருக்கு  8 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.576 கோடி) பரிசு  வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ஈரானைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் சார்பில் 1 அமெரிக்க டாலர் வழங்கி உதவ வேண்டும் “ எனவும்  வலியுறுத்தினார்.

Exit mobile version