தற்பொழுது கோடை காலம் தொடங்கி வெயில் சூட்டை கிளப்பி வருகிறது.இதனால் உடல் உஷ்ணம்,பித்தம் போன்றவை அதிகரித்து பல தொந்தரவுகளை கொடுக்கும்.இந்த பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மூலிகை தைலம் பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)நல்லெண்ணெய் – 200 மில்லி
2)வெந்தயம் – அரை தேக்கரண்டி
3)கற்றாழை ஜெல் – நான்கு
4)எலுமிச்சை துண்டுகள் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அரை தேக்கரண்டி வெந்தயத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் வெந்தய தண்ணீரை வடிகட்டிவிட்டு வெந்தயத்தை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் சிறிய எலுமிச்சம் பழத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பீஸ் கற்றாழை மடலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து 200 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
அதன் பிறகு நறுக்கிய கற்றாழை துண்டுகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து எலுமிச்சை துண்டுகள் மற்றும் அரைத்த வெந்தய பேஸ்டை அதில் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.எண்ணெய் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு நாள் முழுவதும் எண்ணெயை ஆறவிட வேண்டும்.பிறகு இதை பாட்டிலுக்கு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த எண்ணெயை வாரம் இருமுறை தலைக்கு தடவி குளித்து வந்தால் உடல் சூடு,பித்தம் போன்றவை குறையும்.
இந்த எண்ணையை தொப்புள்,கால் கட்டை விரலில் சில சொட்டுகள் விட்டால் உடல் சூடு தணிந்துவிடும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் பிசின் – ஒரு தேக்கரண்டி
2)மோர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து ஒரு தேக்கரண்டி பாதாம் பிசினை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவைக்க வேண்டும்.
பாதாம் பிசின் ஊறி ஜெல்லி பக்குவத்திற்கு வந்த பிறகு ஒரு கிளாஸ் பசு மோரில் இதை மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இப்படி தினமும் ஒரு கிளாஸ் பாதாம் பிசின் சேர்த்த மோர் பருகி வந்தால் உடல் சூடு,பித்தம் தணியும்.