Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சூரியன் – செவ்வாய் இணைவதால் பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்!

சூரியன் – செவ்வாய் இணைவதால் பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்!

இன்று சுக்கிரன் பகவான் தன்னை பின்நோக்கி நகர உள்ளார். மேலும், புதன் பகவானும் பின்நோக்கி தொடர்ந்து பயணிக்கிறார். வரும் செப்டம்பர் 15ம் தேதி அன்று புதன் பகவானின் பாதையில் மாற்றம் நிகழும். புதன் பகவான் பின்நோக்கு இயக்கத்திலிருந்து நேரடி இயங்கத் தொடங்குவார். சனி பகவானும் செப்டம்பர் மாதத்தில் பின்நோக்கி நகர்கிறார்.

இதனால், கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும். அப்போது, செவ்வாய் பகவானும், சூரிய பகவானும் ஒரே இணைப்பில் இணைவார்கள். செவ்வாய், சூரியன் இணைவதால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படப்போகிறது என்று பார்ப்போம் –

மிதுனம்:

செப்டம்பர் மாதம் செவ்வாய் பகவானும், சூரிய பகவானும் இணைவதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். திடீரென்று பண ஆதாயங்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

துலாம்:

செப்டம்பர் மாதம் செவ்வாய் பகவானும், சூரிய பகவானும் இணைவதால், துலாம் ராசிக்காரர்களே உங்கள் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிபுரிபவர்களுடன் நல்ல இணக்கம் ஏற்படும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்:

செப்டம்பர் மாதம் செவ்வாய் பகவானும், சூரிய பகவானும் இணைவதால், கடக ராசிக்காரர்களே உங்களுக்கு பணி செய்யும் இடத்தில் மூத்த அதிகாரிகளின் உதவி கிடைக்கும். நல்ல பெயர் எடுப்பீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மனைவியோடு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷபம்:

செப்டம்பர் மாதம் செவ்வாய் பகவானும், சூரிய பகவானும் இணைவதால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பொருள், வீடு, வசதி பெறுவீர்கள். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். ரொம்ப நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தனுசு:

செப்டம்பர் மாதம் செவ்வாய் பகவானும், சூரிய பகவானும் இணைவதால், தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் உயர்வு பெறுவீர்கள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

விருச்சிகம்:

செப்டம்பர் மாதம் செவ்வாய் பகவானும், சூரிய பகவானும் இணைவதால், விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. நீங்கள் நிலுவையில் வைத்திருந்த அனைத்து பணிகளையும் சீராக முடிப்பீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

 

 

Exit mobile version