Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே நாளில் சன் tan மறைந்து பளிச்சென்று ஆகிவிடுவீர்கள்!! செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும்!!

ஒரே நாளில் சன் tan மறைந்து பளிச்சென்று ஆகிவிடுவீர்கள்!! செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும்!!

பல பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை முகத்தில் உள்ள சன் tan, பருக்கள், மங்கு போன்றவற்றால் சிரமப்படுகின்றனர். இது எந்தவிதமான வலியை ஏற்படுத்தவில்லை என்றாலும் பெண்களின் அழகை இது குறைத்து காட்டுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளி பருக்கள் தழும்பு சன் டான் முதலியவை மறைவதற்காக ஒரு ஆரோக்கியமான தீர்வை இங்கு தெரிந்து கொள்வோம்.

செய்முறை:

இதற்கு நமக்கு தேவைப்படுவது பீட்ரூட். பீட்ரூட்டை முதலில் நன்கு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது துருவிய பீட்ரூட்டை மிக்ஸியில் அரைத்து அதன் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் அரைக்காமல் வடித்தும் அந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு வடிகட்டி எடுத்த இந்தச் சாறுடன் ஒரு தேக்கரண்டி அளவு கடலை மாவை சேர்த்துக் கொள்ளவும். மேலும் இதனுடன் சிறிதளவு தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கலந்து காற்று போகாத ஒரு டப்பாவில் இதை சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தி வர வேண்டும்.

இது ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இரவு தூங்குவதற்கு முன் இதை சன் tan இருக்கும் இடங்களில் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு வெறும் தண்ணீர் கொண்டு இதை கழுவி விட வேண்டும்.

இவ்வாறு இரவு செய்துவிட்டு மறுநாள் காலையில் எழுந்து நம் முகத்தை பார்க்கும் போது பளிச்சென்று வித்தியாசம் நமக்கு தெரியும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், தழும்புகள் அனைத்தும் படிப்படியாக மறையும்.

இதை முகத்தில் மட்டுமல்லாமல் உதட்டிற்கு பயன்படுத்தி வர உதட்டில் உள்ள கருமை படிப்படியாக மறையும். இதை ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் பயன்படுத்தி வரலாம் இதை பயன்படுத்தி வந்தால் கரும்புள்ளிகள் பருக்கள் தழும்புகள் சன்டேன் மறைவதோடு மட்டுமல்லாமல் மங்கு போன்றவற்றையும் படிப்படியாக மறையச் செய்யும்.

Exit mobile version