Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் டி.வி.யை மொத்தமாக காலி செய்ய பிளான் போடும் சன் டி.வி… தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க…!

SUN TV

SUN TV

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி டி.ஆர்.பி.யில் வேற லெவலுக்கு ஹிட்டடித்து வருகிறது. முதல் சீசனுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து தற்போது இரண்டாவது சீசனும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எப்போதுமே விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை கொஞ்சமும் கெளரவம் பார்க்காமல் சன் டி.வி. காப்பியடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உலவி வருகிறது.

vijay TV

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை காலி செய்யும் அளவிற்கு தரமான சமையல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும் என்ற முயற்சியில் சன் டி.வி. தீவிரம் காட்டி வருகிறதாம். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்று தெரிந்தால் ஷாக்காகிடுவீங்க. ஆமாங்க… நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் படி கேட்டு வருகிறார்களாம். இதற்கு முன்னதாக நம்ம ஊரு ஹீரோ என்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார்.

vijaysethupathi

எனவே இந்த சமையல் நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கினால், விஜய் டி.வி.யின் டி.ஆர்.பி-யை கிளீன் போல்ட் ஆக்கிவிடலாம் என சன் டி.வி. தரப்பு நினைக்கிறதாம். இதற்காக வாரத்திற்கு 3 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க சன் டி.வி. தயாராக உள்ளதாம். அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள டாப் சமையல் கலைஞர்களையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க முயற்சி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version