Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செல்போன் கடையில் வேலை பார்க்கும் சன் டிவி சீரியல் நடிகர்.. இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..??

Sun TV serial actor working in a cell phone shop... He has such a situation

Sun TV serial actor working in a cell phone shop... He has such a situation

செல்போன் கடையில் வேலை பார்க்கும் சன் டிவி சீரியல் நடிகர்.. இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..??

சன் டிவி என்றாலே சீரியலுக்கு பெயர் பெற்றது. இதில் பல சீரியல்கள் இப்போது வரை பிரபலமாக உள்ளன. அதிலும் குறிப்பாக மெட்டி ஒலி சீரியல் எல்லாம் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காது. அந்த அளவிற்கு 90களில் பிரலபமான ஒரு சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். இந்த சீரியலை இயக்கியவர் திருமுருகன்.

இவர் இதனை தொடர்ந்து அடுத்தடுத்து இயக்கிய நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு போன்ற ஹிட் சீரியல்களை இயக்கி இருந்தார். சமீபத்தில் கூட புத்தாக சீரியல் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில், திருமுருகனின் நாதஸ்வரம் சீரியலில் நடித்த பிரபலமான சீரியல் நடிகர் குறித்து தான் தற்போது இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

அவர் வேறு யாருமல்ல நாதஸ்வரம் சீரியலில் நடித்த காஜா ஃபெரோஸ் தான். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது ஆர்வம் காரணமாக நாதஸ்வரம் சீரியல் ஆடிஷனுக்கு காஜா சென்றுள்ளார். அதில் தேர்வான அவருக்கு சீரியல் முழுவதும் பயணிக்கும் வகையில் ஒரு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் காஜாவிற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து திருமுருகன் இயக்கிய அனைத்து சீரியல்களிலும் காஜா இருந்தார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமுருகன் சீரியல் இயக்காததால், காஜாவிற்கு வாய்ப்புகளி கிடைக்காமல் தருமபுரியில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். காஜா கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் சீரியலில் நடித்து இருந்தாலும் அவருக்கு திருமுருகன் தவிர வேறு யாரையும் தெரியாதாம்.

எனவே வாய்ப்புகள் கிடைக்காததால் சொந்த ஊருக்கு வந்து செல்போன் கடையில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். மேலும், திருமுருகன் புதிதாக சீரியல் தொடங்க உள்ள நிலையில் நிச்சயம் தன்னை நியாபகம் வைத்து அழைப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Exit mobile version