Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் டிவியின் டிஆர்பியை குறைத்த சன் டிவியின் புதிய சீரியல்!! என்ன சீரியல் தெரியுமா??

Sun TV's new serial reduces Vijay TV's DRP !! Do you know what serial is ??

Sun TV's new serial reduces Vijay TV's DRP !! Do you know what serial is ??

விஜய் டிவியின் டிஆர்பியை குறைத்த சன் டிவியின் புதிய சீரியல்!! என்ன சீரியல் தெரியுமா??

பொதுவாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு தான் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளின் பொழுதுபோக்குக்காக தொடரப்பட்டது தான் தொலைக்காட்சித் தொடர்கள். மேலும் ஆரம்ப காலகட்டத்தில் சீரியல் என்று சொன்னாலே அதற்கு சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி போன்ற தொலைக்காட்சிகள் தான் பிரபலமாகி வந்தது. இதை தொடர்ந்து தற்போது பல தொழில் நுட்ப வளர்ச்சிகளால் பல தொலைக்காட்சிகள் உருவாகி பல சீரியல்கள் பல கதைகளில் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனால் தற்போது விஜய் தொலைக்காட்சி தான் சீரியலுக்கு பேர்போன தொலைக்காட்சியாக உள்ளது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் தனி மவுசு உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே ரசிகர்கள் விரும்பும் வகையில் இருக்கும். இதைத்தொடர்ந்து இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல சீரியல் வரும் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எப்பொழுதுமே டாப் ரேட்டிங்கில் இருக்கும். அதிலும் தொலைக்காட்சியின் டிஆர்பியை உயர்த்தும் சீரியல் என்று ஒரு சில சீரியல் உள்ளது.

அதில் டிஆர்பி அதிகம் இருக்கும் சீரியல் என ஈரமான ரோஜாவே மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் இடம்பிடித்து வரும். மேலும் இந்த டிஆர்பி நிலையை வாரம் ஒருமுறை கணக்கிடப்படும். இந்த டிஆர்பி என்பது மக்கள் எவ்வளவு அந்த நாடகத்தை விரும்புகிறார்கள் என்பதான் அடிப்படையில் கொண்டது. அதன்படி சில மாதங்களாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே மற்றும் பாரதிகண்ணம்மா சீரியல் தான்  டிஆர்பி அதிகம் இருந்து வரும். இந்த நிலையில் ஒரே வாரத்தில் அந்த நாடகத்தின் டிஆர்பியை இறக்கிவிட்டது புதிய நாடகம் ஒன்றின் டிஆர்பி. அது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே என்னும் புதிய நாடகம் தான். தற்போது இந்த நாடகம் தான் இந்த வார டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது.

Exit mobile version