Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே வருடத்தில் சிவாஜியின் 6 படம் சூப்பர் ஹிட்! 6 படத்தையும் மிஞ்சிய ஒரு படம்!

#image_title

1972 ஆம் ஆண்டு மொத்தம் சிவாஜியின் 6 படங்கள் வெளியானது. ஒரே ஒரு படம் தோல்வி அடைந்த நிலையில் மற்ற அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஆனால் ஒரே ஒரு படம் மட்டும் அனைத்து சூப்பர் ஹிட் ஆன படங்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது என்ற தகவல் தான் இப்பொழுது கிடைத்துள்ளது.

 

அந்த படம் தான் வசந்த மாளிகை. வசந்த மாளிகை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 1 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

 

இதேபோல், சிவாஜிகணேசன் ‘ஞான ஒளி’, ‘தர்மம் எங்கே?’, ‘தவப்புதல்வன்’, ‘நீதி’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘ராஜா’, ‘வசந்தமாளிகை’ என ஏழு படங்களில் நடித்தார். ‘ஞான ஒளி’ படத்தை பி.மாதவன் இயக்கினார். ‘தர்மம் எங்கே?’ படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். ‘தவப்புதல்வன்’ படத்தை முக்தா சீனிவாசன் இயக்கினார். ‘நீதி’ படத்தை சி.வி.ராஜேந்திரன் இயக்கினார். ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தை பி.மாதவனும் ‘ராஜா’ படத்தை சி.வி.ராஜேந்திரனும் ‘வசந்த மாளிகை’ படத்தை கே.எஸ்.பிரகாஷ்ராவும் இயக்கினார்கள்.

 

1973 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜராஜ சோழன் மற்றும் அனைத்து படங்களையும் தாண்டி 750 நாள் ஓடிய பெருமை வசந்த மாளிகையே சேருமாம். அந்த காலத்திலேயே ஒரு கோடி வசூல் செய்தது என்றால் சும்மாவா.

 

இலங்கையில் ஒரு தியேட்டரில் வெளியான வசந்த மாளிகை மக்கள் கூட்டம் கூடியதால் ஒரே கேசட்டை வைத்து 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கேசட்டை மாற்றி படம் ஓட்டிய மாபெரும் வெற்றி திரைப்படம் வசந்த மாளிகை படம்.

 

இலங்கையில் ஒரு படம் அதிக நாள் ஓடியது என்றால் அது வசந்த மாளிகை தான்.

 

Exit mobile version