சூப்பர் குட் நியூஸ்! ஒரு பீஸ் சீம்பால் சாப்பிட்டால்.. இத்தனை நன்மைகளை பெற முடியுமா!!

0
92
Super good news! Can you get so many benefits if you eat a piece of bean milk!!

மாடு கன்று ஈன்ற உடன் சுரக்கும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருள் சீம்பால்.இந்த பால் மஞ்சள் நிறத்தில் அதிக புரதம் நிறைந்து காணப்படும்.இந்த பாலில் கொழுப்பு சத்து மிகவும் காணப்படுகிறது.

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் கன்று குட்டிக்கு சீம்பால் முக்கியம்.மாட்டு மடியில் சுரக்கும் முதல் பால் என்பதால் இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் திரவமாக திகழ்கிறது.

கிராமபுறங்களில் சீம்பால் விரும்பி உண்ணும் பால் பொருளாக இருக்கின்றது.மாட்டில் இருந்து கிடைக்கும் பாலை நாள் முழுவதும் சேகரித்து வைத்து பிறகு ஏலக்காய்,சுக்கு,பால் மற்றும் சர்க்கரை சேர்த்து சீம்பால் காய்ச்சப்படுகிறது.

இந்த சீம்பால் கிட்டத்தட்ட சீஸ் போன்ற சுவையில் இருக்கும்.சீம்பால் வாசனை சிலருக்கு பிடிக்காமல் இருக்கும்.ஆனால் உண்மையில் இதன் ஆரோக்கிய நன்மைகள் தெரிந்தால் நிச்சயம் விரும்பி உண்பீர்கள்.

சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் அதிகளவு புரதம் நிறைந்திருக்கிறது.இந்த சீம்பாலை உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.குழந்தைகளுக்கு இந்த சீம்பாலை காய்ச்சி சர்க்கரை போட்டு கொடுத்தால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

புரதச்சத்து குறைபாடு இருப்பவர்கள்,சைவப் பிரியர்கள் சீம்பாலை உட்கொள்ள வேண்டும்.காபி மற்றும் டீ போன்றவை செய்ய இந்த பால் உகந்த ஒன்று இல்லை.மாடு கன்று ஈன்ற பிறகு கிடைக்கும் முதல் பாலில் காபி,டீ போட்டால் பால் திரிந்துவிடும்.இந்த பாலில் சீம்பால் மட்டுமே காய்ச்ச முடியும்.தாய்ப்பாலுக்கு நிகரான சத்து இந்த சீம்பாலில் கிடைக்கிறது.செரிமான சக்தி மேம்பட சீம்பால் செய்து சாப்பிடலாம்.தற்பொழுது பலரும் சீம்பாலின் மகத்துவத்தை தெரிந்து அதை காசு கொடுத்து வாங்கி சாப்பிடுகின்றனர்.சீம்பால் கன்று ஈன்ற மாட்டில் இருந்து முதல் நாள் மட்டுமே கிடைக்கும் என்பதால் அதற்கு எப்பொழுதும் தனி மவுசு இருக்கின்றது.