Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சபாஷ்!!! சரியான ஆலோசனை! இலவச பஸ்களில் பயணிக்கும் மகளிர் உங்களுக்குத்தான்!

மகளிருக்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று முதல்வர் அறிவித்தது அனைவருக்கும் தெரிந்ததே. முதல்வர் பதவி ஏற்ற உடனே கையெழுத்திட்ட திட்டங்களில் மகளிருக்கு இலவச பேருந்து என்ற திட்டமும் இருந்தது. இந்த திட்டத்திற்கு மகளிர் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது என்று கூறலாம். இப்பொழுது எந்த பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று மகளிர் குழம்புவதால் அந்த சாதாரண அரசுப் பேருந்துக்கு நிறத்தை மாற்றலாம் என்று ஆலோசனை எடுத்துள்ளனர்.

 

இது சாதாரண கட்டண பேருந்துகளை மகளிரால் அடையாளம் காணமுடியாமல் எல்லாம் பஸ்களில் ஏறி விடுகின்றனர். எங்களுக்கு இலவசம் தானே என்று நடத்துனரிடம் சண்டை போடுவதால் பிரச்சனை ஏற்படுகிறது.

 

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக மகளிர்கள் எளிதாக அடையாளம் காணும்படி சாதாரண கட்டண பேருந்துகளின் நிறத்தை மாற்றலாம் என்று ஆலோசனை செய்து வருகின்றனர்.

 

சாதாரண கட்டண பேருந்துகளின் நிறத்தை மாற்றலாம் என்று அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர்கள் எளிதாக அடையாளம் காண்பதற்கு மேலும் எந்த மாதிரியான முடிவை எடுக்கலாம் என ஆலோசித்த பொழுது, பேருந்து முழுவதும் நிறம் பூசுவதற்கு பதிலாக பேருந்தின் நடுவே இளம் சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டலாம் என்ற ஆலோசனையும் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதற்கு மக்கள் பெரும் ஆதரவை தந்து வருகின்றனர். இந்த ஆலோசனைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

 

Exit mobile version