Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேலையில்லா இளைஞர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! மாதந்தோறும் உதவித்தொகை!

Super news for unemployed youth! Stipend every month!

Super news for unemployed youth! Stipend every month!

வேலையில்லா இளைஞர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! மாதந்தோறும் உதவித்தொகை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மேலும் கொரோனா பரவலின் காரணமாக பலருக்கும் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டது.

அதன் அடிப்படையில் தற்போதும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையிலும் அண்மையிலிருந்து ட்விட்டர், மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் போன்ற தொழில் நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கூடிய விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

அதனால் தற்போதைய அங்கு அரசியல் களமானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று நடந்த காங்கிரஸ் இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ரொக்க பணமும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 1500 உதவித்தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் முதல் இரண்டு வருடத்திற்கு இந்த உதவித்தொகையும் பின் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த வாக்குறுதியினால் இளைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Exit mobile version