பாரத் கேஸ் வெளியிட்ட சூப்பர் ஆப்பர்! ரூ.25 க்கு சிலிண்டர்!
இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே பல தொழில்களும் முடங்கிவிட்டது.மக்கள் பலர் உணவின்றி வேலைவாய்புகள் இன்றி இருக்கின்றனர்.மக்கள் நலன் கருதி அரசாங்கமும் பலவித உதவிகளை செய்து வருகின்றனர்.கொரோனா தொற்று ஆரம்பமான முதலே விலை வாசியும் வானத்தை தொடும் அளவிற்கு எட்டியது.அந்தவகையில் தற்போது பெட்ரோல்,டீசல் மற்றும் சிலிண்டர் விலை அதிகளவு உயர்ந்துள்ளது.அதுமட்டுமின்றி மக்கள் விலை வாசியை கண்டித்து பலவித போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
பல போராட்டங்களை நடத்தியும் விலை வாசி ஏதும் குறைய வில்லை.அதனையடுத்து தற்போது பாரத் கேஸ் சிலிண்டர் மிகப்பெரிய ஆப்பர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.பாரத் கேஸ் நிறுவனம் கூறியதாவது,பேடிஎம்-யில் (PAYTM) –யில் முதன் முதலாக சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு ரூ.800 கேஷ்பேக் ஆப்பர் கூறியுள்ளனர்.இதனை அந்நிறுவனம் ட்விட்டர் இணையத்திலும் பதிவு செய்துள்ளது.இதனை பல மக்கள் உபயோகம் செய்து பிரி புக்கிங் செய்து வருகின்றனர்.
இந்த கேஷ்பேக் வைத்துக்கொண்டு அவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் அவர்களின் தேவைக்கு உபயோகித்து கொள்ளலாம். இந்த சலுகையானது இன்று ஓர் நாள் மட்டுமே தந்துள்ளனர்.இதனை மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உள்ளதால் மக்கள் விரைந்து புக் செய்து வருகின்றனர்.