எஸ்பிஐ வெளியிட்ட சூப்பர் ஆப்பர்! இந்த கார்ட் வாங்கினால் ரூ.2 லட்சம்!

0
89
Super Offer Released by SBI! Rs 2 lakh if ​​you buy this card!

எஸ்பிஐ வெளியிட்ட சூப்பர் ஆப்பர்! இந்த கார்ட் வாங்கினால் ரூ.2 லட்சம்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவும் ஒன்று.அதன் வகையில் ஸ்டேட் பாங்க ஆப் இந்திய புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.அதில் அவர்கள் கூறியிருப்பது ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவில் ஜன்-தன்-கணக்கை வைத்திருப்பவர்கள் எஸ்பிஐ யின் ஜன்-தன்-ரூபே கார்டுக்கு விண்ணப்பித்தால் ரூ.2 லட்சம் வரையிலான விபத்து காப்பீட்டு தொகையை பெறலாம்.

பிரதான் மந்திரி ஜன்-தன்-யோஜனா அதாவது (பி.எம்.ஜே.டி.ஒய்) இத்திட்டமானது கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பகங்களுக்கு சாலை விபத்துகளிலிருந்து மக்களை பாதுகாக்க இத்திட்டத்தை நிறுவியுள்ளது.மேலும் மக்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. பி.எம்.ஜே.டி.ஒய் என்பது நிதி சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வதற்கான ஒரு வித தேசிய பணியாகும்.

இதில் வங்கி சேமிப்பு மாற்றம் வைப்பு கணக்குகள்,பணம் அனுப்புதல்,கடன்,காப்பீடு மற்றும் ஓய்வுதியம் என அனைத்தும் உள்ளடங்கும். பி.எம்.ஜே.டி.ஒய் என்ற கனாக்குகளை உபயோக்கிப்பவர்கள் மாதம் தூறும் சராசரியான நிலுவைத் தொகையை பராமரிப்பது தேவையில்லை என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.ஜன்-தன்-கணக்குகளை யாரெல்லாம் தொடங்கலாம் என அனைவருக்கும் பெரிய கேள்வியாக இருக்கும்.10 வயது நிரம்பிய அனைத்து குடிமகனும் ஜன-தன்-கணக்கை துவங்கலாம்.உங்கள் அடிப்படை சேமிப்பு கணக்கையும் இந்த ஜன்-தன்-யோஜனா கணக்கிற்கு மற்றிகொல்ள்ளலாம்.

இந்த திட்டத்தை ஆரம்பிக்க ஆதரட்டை இருந்தால் போதுமானது ஆகும்.ஆதாரட்டை இல்லையென்றால் வாக்களர் அட்டை,ஓட்டுனர் உரிமம்,பாஸ்போர்ட் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டையை கொடுத்து வின்னப்பித்துக்கொள்ளலாம்.

பிராதான் மந்திரி ஜன்-தன்-யோஜனா கணக்கை துவங்குபவர்களுக்கு வைப்பு மீதான வட்டி கிடைக்கும்.மேலும் இதற்கு இதற்கு இருப்பு தேவையில்லை.இந்த இந்தியா முழுவதும் ஈசியான முறையில் பண பரிவத்தனை செய்து கொள்ள முடியும்.அதுமட்டுமின்றி இதில் அதிக பயன்கள் இருப்பதாக எஸ்பிஐ கூறுகிறது.