சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், சத்யன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில்,
தற்போது காவேரி மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இது குறித்து அவரது மனைவி திருமதி.லதா ரஜினிகாந்த் கூறியதாவது, ரஜினி அவர்களுக்கு வழக்கமாக செய்யப்படும் உடல் பரிசோதனைக்காக தான் சென்று உள்ளதாக கூறியுள்ளார். மேலும், இன்னும் சில மணி நேரங்கள் அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.