மூட்டுவலியால் அவதிபடுபவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!
மூட்டுவலியானது அதிக அளவு பெண்களுக்கு காணப்படும்.ஏனென்றால் அதிக விரைவிலேயே பெண்களுக்கு மூட்டு தேய்மானம் ஏற்பட்டுவிடும்.பெண்கள் குழந்தைகளை பெற்றேடுப்பதாலும்,அதிக அளவு வேலைகளை சுமைக்கின்றனர் அதனால் அவர்களுக்கு 30 வயதை தாண்டியதுமே மூட்டு வலி ஏற்பட்டுவிடுகிறது.அதுமட்டும் காரணமாக இருக்காது.சிலர் உடம்பில் கால்சியம் சத்தானது குறைந்து காணப்பட்டால் அவர்களுக்கும் மூட்டு வலி ஏற்படும்.
நமது முன்னோர்கள் உணவு மருந்து மருந்தேப் உணவு என்னும் பலக்கத்தை கொண்டிருந்தனர்.ஆனால் இப்போதைய சமூகத்தினர் சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் மருத்துவரி நாடியே சென்று விடுகின்றனர்.இந்த மருத்துவத்தை செய்து பாருங்கள் பிறகு உங்களுக்கு மூட்டு வலி என்பதே இருக்காது.
மூட்டுவலி,சதை வீக்கம்:
மூட்டுவலி,சதை வீக்கம் குணமாக நோச்சிசாற்றை பூசுவதன் மூலம் குணமைடையும்.
மூட்டுவலி மற்றும் இடுப்பு வீக்கம்:
நொச்சி இழை மற்றும் உத்தாமணி இழை வதக்கி ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வீக்கம் குறையும்.
வாதவலி:
ஊமத்த இழையை நல்லெண்ணையில் வதக்கி வாதம் உள்ள இடத்தில் கட்டுவதன் மூலம் வாதம் விரைவில் குணமாகும்.
மூட்டு வீக்கம் குறைய:
சுக்கை நன்றாக அரைத்து பூசி வர மூட்டு வீக்கம் குறையும்.
மூட்டு பிடிப்பு:
சரக்கொன்றை மரவதயை கரைத்து பற்றுப்போட மூட்டு பிடிப்பு விரைவில் குணமாகும்.
மூட்டுவலி,இடுப்பு மற்றும் வாதவலி ஒத்தடம்:
முருங்கை இழையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டுவதன் மூலம் இவற்றின் வலிகள் குணமாகும்.
இடுப்புவலி மற்றும் மூட்டுவலி:
கோதுமையை பொன்னிறமாக அரைத்து சலித்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர முற்றிலும் இடுப்புவலி மற்றும் மூட்டுவலி குணமாகும்.அல்லது வேப்ப எண்ணைய்,விளக்கு எண்ணைய் மற்றும் கடுகு எண்ணை கலந்து தடவி வர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
அத்துடன் நாம் தினமும் நம் உணவில் அதிக அளவு கால்சியம் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ளவேண்டும்.பால்,கருவை நீக்கிய முட்டை,இவற்றி விட முடக்கத்தான் கீரை சரவாங்கி போன்ற மூட்டு வலிக்கு நல்ல தீர்வு.வெள்ளை நிற காய்கறிகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.பாட்டி வைத்தியத்தை பின்பற்றி ஆரோக்கியமுடன் வாழுங்கள்.