Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒற்றைத் தலைவலியை ஒரே நொடியில் குணமாக்கும் சூப்பர் டிப்ஸ்!!

#image_title

ஒற்றைத் தலைவலியை ஒரே நொடியில் குணமாக்கும் சூப்பர் டிப்ஸ்!!

அதிக நேரம் கணினி செல்போன் போன்றவற்றை உபயோகிப்பதனாலே நமக்கு தலைவலி வந்துவிடுகிறது. அந்த வகையில் இந்த தலைவலி ஹார்மோன் அடிப்படையில் வேறு வேறு வகைகளையும் கொண்டுள்ளது.

மைக்ரேன் தலைவலி என ஆரம்பித்து ஒற்றை தலைவலி வரை இதில் அடங்கும். இந்த தலைவலி ஏற்படும் பொழுது சிலருக்கு வாந்தி உண்டாகும். குறிப்பாக இந்த ஒற்றைத் தலைவலி ஆனது நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறை மற்றும் மன அழுத்தம் முக்கிய காரணமாக அமையும்.

நம் எடுத்துக் கொள்ளும் உணவு பழக்கவழக்கம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் பட்சத்தில் ஒற்றை தலைவலியிலிருந்து விடுபட முடியும். ஒற்றை தலை வலி இருப்பவர்கள் கட்டாயம் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள கஃபையின் என்ற பொருள் தலையில் உள்ள நரம்புகளை அதிகளவு பாதிப்படைய செய்யும்.

டிப்ஸ்1

இந்த ஒற்றைத் தலைவலி நமக்கு ஏற்படும் பொழுது கீழாநெல்லி செடியை ஒரு கொத்து பறித்து வாயில் போட்டு நன்றாக மென்று அதன் சாற்றை விளங்கும் பட்சத்தில் உடனடியாக நிவர்த்தி காண முடியும்.

டிப்ஸ்2

அதேபோல அதிக அளவு மன அழுத்தமும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பதால் அதிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. அதேபோல அதிக அளவு வெளிச்சமும் ஒரு சிலருக்கு ஒற்றை தலைவலி ஏற்பட காரணமாக இருப்பதால் அதிலிருந்தும் விலகி இருக்கலாம்.

டிப்ஸ்:3

நம் நரம்புகளை பலமாக வைத்துக் கொண்டாலே இந்த தலைவலி பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் எனவே அதனை பாதிக்கும் காபி டீ போன்றவற்றிலிருந்து தள்ளி இருப்பது மிகவும் நல்லது.

இவை அனைத்தையும் மூன்று மாத காலம் பின்பற்றி வரும் பட்சத்தில் எந்த ஒரு மருந்து மாத்திரை இன்றி அவற்றை தலைவலியை சரி செய்யலாம்.

Exit mobile version