ஏசி இல்லாமலேயே உங்கள் ரூமை Cool ஆக மாற்ற சூப்பர் டிப்ஸ்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!
கோடைகாலம் வந்து விட்டால் பெரும்பான்மையாக வீடுகளில் கூட நம்மால் இருக்க முடியாது அந்த அளவிற்கு வெப்ப அனலானது அதிக அளவு காணப்படும் அது மட்டும் இன்றி என்றும் இல்லாத அளவிற்கு இம்முறை வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நம்மில் பலரது வீடுகளில் ஏசி என்பது இருப்பதில்லை. அதற்கு மாறாக வீட்டை எப்படி குளுமையாக வைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஏசி அளவிற்கு வீட்டை குளுமை படுத்த முடியவில்லை என்றாலும் முடிந்த அளவிற்கு வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சூட்டை ஆவது குறைக்க முடியும்.
டிப்ஸ்:1
தற்பொழுது வெயில் சூடானது வீடுகளில் இறங்காமல் இருக்க கூலிங் டைல்ஸ் கூலிங் பெயிண்ட் போன்றவை வந்துவிட்டது. ஆனால் இதன் செலவானது சற்று அதிகமாகவே காணப்படும். அதற்கு மாறாக நாம் நம் வீட்டில் இருக்கும் கால்மிதிகளை மாடிக்கு கொண்டு சென்று தரையில் போட்டு விட வேண்டும். பின்பு அதில் நன்றாக தண்ணீர் தெளித்து அப்படியே விட்டு விட வேண்டும். இந்த தண்ணீரானது காயும் வரை நமது வீட்டினுள் வெப்ப சனலமானது சற்று இல்லாமல் காணப்படும்.
டிப்ஸ்: 2
ஒரு பக்கெட் தண்ணீரில் இரண்டு சொட்டு துணிக்கு போடப்படும் வாசனை திரவியத்தை சேர்த்து விட்டு அதில் காட்டன் பெட்ஷீட் ஒன்றை முக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை நம் வீட்டில் உள்ள ஜன்னலில் கட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது அந்த காட்டன் துணியில் உள்ள ஈரப்பதத்தின் மூலம் நமக்கு சில்லென்று காற்று வீசும்.
டிப்ஸ்:3
இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் உங்களது படுக்க அறையில் உள்ள லைட் அனைத்தையும் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே அணைத்து விடுங்கள். ஏனென்றால் அதிகளவு வெப்பமானது இந்த லைட்டிலிருந்து வெளியேறுவதால் அது நமது அறையை மேற்கொண்டு வெப்பமடைய செய்யும். இவ்வாறு செய்வதால் குறைந்தபட்சமாவது நமது அறையில் உண்டாகும் அனலை குறைகள் முடியும்.
டிப்ஸ்:4
காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை ப்ரீசரில் வைத்து விடுங்கள். பின்பு அதனை இரவு தூங்குவதற்கு முன் எடுத்து நீங்கள் படுக்கும் அறையில் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் உங்களது படுக்கையறை சற்று குளிர்ச்சியாக இருக்கும்.