முகத்தில் கரும்புள்ளி மற்றும் எண்ணைப்பசையை உடனடியாக நீக்கி முகத்தை பளபளப்பாகும் சூப்பரான டிப்ஸ்!

0
255

பருவப் பெண்கள் முதல் குடும்பப் பெண்கள் வரை அனைவருக்கும் இருக்கக்கூடிய இரண்டு பொதுவான பிரச்சனைகள் : முகப்பரு உருவாகி,அந்த இடத்தில் அப்படியே கருப்பு தழும்பாக நாள்போக்கில் மாறிவிடுவது. மற்றொரு பிரச்சனை சிலருக்கு இயற்கையாகவே அதிக எண்ணை பசை கொண்ட சருமம் இருக்கும்.

இவர்கள் எவ்வளவுதான் ஃபேஸ் வாஷ் கிரீம் போட்டாலும் மேக்கப் போட்டாலும் முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டே இருக்கும் இதனால் அவிங்க முகம் பொலிவிழந்து காணப்படும்.இதை இரண்டுமே சரி செய்ய ஒரு சூப்பரான டிப்ஸ்

தேவையான பொருட்கள் :

ஆரஞ்சு தோல்,தேங்காய் எண்ணெய், பசும்பால்

பேஸ்ட் தயாரிக்கும் முறை :

ஆரஞ்சுப்பழத்தோலை காயவைத்து நன்றாக பொடியாக்கி அதனுடன் பால் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கிக் கொள்ள வேண்டும்.பின்னர் இந்த பேஸ்ட்-யை முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவி வரவேண்டும்.

இதுபோன்று தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வருவின்,உங்கள் முகத்தில் இருக்கும் கரும் புள்ளி இருந்த இடம் தெரியாமல் போகும்.மேலும் எண்ணெய் சருமம் பளபளப்பாகி முகம் நீங்கள் எதிர்பார்த்ததைவிட பொலிவாகும்.