எம்ஜிஆர் மற்றும் ஜானகி அம்மாள் குறித்த ரகசியத்தை உடைக்கும் சூப்பர் ஸ்டார்!!

0
96
Superstar breaks the secret about MGR and Janaki Ammal!!

சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜானகி அம்மாள் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நூற்றாண்டு நினைவுகளாக சூப்பர் ஸ்டார் பேசியதாவது :-

தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தன்னுடைய உரையை தொடங்கினார்.

இந்த வீட்டிற்கு கடம்பூர் ராஜு அவர்கள் அழைப்பிதழை என் வீடு தேடி வந்து கொடுத்தார்.நான் வந்து வீடியோ மூலமாக உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன். ஜானகி அம்மாளும் எம்.ஜி.ஆர். அவர்களும் சேர்ந்து நடித்த முதல் படம், மருதநாட்டு இளவரசி என நினைக்கிறேன்.

அப்பொழுது அவர்கள் தான் மிகப்பெரிய நடிகையாக தமிழ்சினிமாவில் விளங்கினார். எம் ஜி ராமச்சந்திரன் அவர்களுக்கு இது இரண்டாவது படமோ மூன்றாவது படமோ தான். இவர்களுக்கிடையில் ஏற்பட்ட காதலின் காரணமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை முற்றிலும் ஆக ஜானகி அம்மாள் துறந்து விட்டார்.

ஜானகி அம்மாள் கடைசி வரையில் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களை சந்தோஷமாக பார்த்துக் கொண்டார். பலருக்கு தெரியும் இவர்களுடைய ராமாவரம் வீட்டிற்கு சென்றால் எப்பொழுதும் உணவு கிடைத்துக் கொண்டே இருக்கும் என்று. உணவு என்றால் தக்காளி சாதம் தயிர் சாதம் போன்றவை அல்ல வெஜ் மற்றும் நான்வெஜ் என தடபுடலான கல்யாண சாப்பாடு 200 , 300 பேருக்கு பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும் சூப்பர் ஸ்டார் பகிர்ந்து கொண்டார்.

மேலும் அவர் பேசுகையில், அதிமுக தலைமைச் செயலகமாக இருப்பது, வி.என்.ஜானகியம்மா உழைத்து சம்பாதிச்சு வைச்சிருந்த வீடு. அதை கட்சிக்காக எம்.ஜி.ஆர் சார் கேட்கும்போது எழுதிக்கொடுத்திட்டாங்க. எப்போதுமே பொதுவேலைகளில் அவங்க ஜாஸ்தி வந்ததே கிடையாது. தோட்டம்,வீடு, சமையல்ன்னு அவங்க வேலையைப் பார்த்திட்டு இருந்தாங்க. ஈழத்தமிழர் பிரச்னைகளுக்குப் போராடும்போது பார்த்திருக்கேன்.

நான் வந்து அவரை மூன்று முறை சந்திச்சு இருக்கேன்.நான் நடித்து கவிதாலயா தயாரித்த ராகவேந்திரா படத்தை எம்.ஜி.ஆர் சாரை அழைத்துக் காட்டச் சொன்னார், கே.பி.சார். நானும் அவரை போனில் அழைத்து சொன்னேன். அப்போது முதன்முறையாக எம்.ஜி.ஆர் சார் கூட படம் பார்க்க வி.என்.ஜானகியம்மா உடன் வந்திருந்தாங்க. அதுதான் அவர்களை முதன்முதலில் பார்த்தது. அப்படத்தை பார்த்துவிட்டு என்னை அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஒரு நாள், அவருடைய தத்துப்பிள்ளை அப்புவுக்கு இரண்டு வீடுகள் இருந்தது. அதில் ஒரு வீட்டில் எனது படத்தின் சூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போது அவங்க அரசியலில் இருந்து விலகி இருந்தாங்க. என்னைப் பார்க்க ஆசைப் பட்டார்கள் உடனே, நான் சென்று பார்த்தேன்.

அவங்க கையாலேயே காபி போட்டுக் கொடுத்தாங்க. ராகவேந்திரா படம் பார்த்திட்டு ரொம்ப நாட்கள் கழித்து, ரஜினி இவ்வளவு சாந்தமாக செய்திருக்கார்ன்னு எம்.ஜி.ஆர் பாராட்டுனதைச் சொன்னாங்க. அதேமாதிரி ரஜினி சிகரெட் குடிப்பதைப் பலர் பின்பற்றுவார்கள். அவர் இப்படி பண்ணக்கூடாதுன்னு எம்.ஜி.ஆர் சார் சொல்ல ஆசைப்பட்டதை அப்போது கூறினார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.