Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் மரணம்! அதிர்ச்சியில் ரஜினி!

Superstar rajinikanth's friend passed away

Superstar rajinikanth's friend passed away

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் மரணம்! அதிர்ச்சியில் ரஜினி!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார்.தற்போது அவர் தனது வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.மேலும் அவரின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி பண்டிகையான நவம்பர் 4 அன்று தியேட்டரில் வெளியாகிறது.கடைசியாக அவர் நடிப்பில் தர்பார் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இவருடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை இவரது ரசிகர்கள் இப்போதே எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு கதை சொல்லியுள்ளதாகவும் இரண்டு கதைகளும் அவருக்கு பிடித்துப்போய் விட்டதாகவும் தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் அடுத்த படத்தில் எந்த இயக்குனருடன் பணியாற்றுவது என இன்னும் அவர் முடிவு செய்யவில்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில் தற்போது ஓய்வில் உள்ள அவருக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வந்துள்ளது.அது என்னவென்றால் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான ராமச்சந்திர ராவ் உயிரிழந்துவிட்டார் என்பதாகும்.புதன்கிழமை அவர் இறந்துள்ளார்.அவருக்கு வயது 73.நடிகர் ரஜினியின் சிறுவயது நண்பரான இவர் ஒரு பத்திரிக்கையாளர் ஆவார்.கன்னட நாளிதழான சம்யுக்தாவில் அவர் ப்ரூப் ரீடராக இருந்து வந்துள்ளார்.2006ம் ஆண்டு அந்த பத்திரிக்கையில் இருந்து அவர் ஓய்வு பெற்று விட்டார்.

அவரது அலுவலகத்துக்கு ஒரு முறை நடிகர் ரஜினிகாந்த் சென்று அவரை சந்தித்துள்ளார்.மேலும் ராமச்சந்திர ராவிற்கு பல உதவிகளையும் செய்திருக்கிறார் நடிகர் ரஜினி.கர்நாடகாவில் வசித்து வரும் ராமச்சந்திர ராவிற்கு மனைவி,இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.இவரின் இறப்புச் செய்தி தற்போது நடிகர் ரஜினியை அதிர்ச்சியுற செய்திருக்கிறது.மேலும் அவரும் அவரது குடும்பமும் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Exit mobile version