சூப்பர் ஸ்டார் Vs உலக நாயகன்.. வசூல் மன்னன் யார்?

0
140
#image_title

சூப்பர் ஸ்டார் Vs உலக நாயகன்.. வசூல் மன்னன் யார்?

தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.அந்தவகையில் ஒரே நேரத்தில் வெளியான இவர்களின் படங்களின் மூலம் ரசிகர்கள் யாரை வசூல் சக்கரவர்த்தியாக கொண்டாடினர் என்பது குறித்த விவரம் இதோ.

1.பைரவி Vs இளமை ஊஞ்சல் ஆடுகிறது

இயக்குநர் எம்.பாஸ்கர் இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி வெளியான படம் பைரவி.இப்படத்தில் ரஜினி,ஸ்ரீபிரியா,கீதா,ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.இப்படம் வெளியாகி வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.

ரஜினியின் பைரவி படம் வெளியாகிய அடுத்த நாள் அதாவது ஜூன் 3 ஆம் தேதி இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் இளமை ஊஞ்சல் ஆடுகிறது.இப்படத்தில் கமலுடன் ரஜினி,ஜெயசித்திரா,ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படம் திரையரங்குகளில் 175 நாட்களும் மேல் ஓடி பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.

இந்த மோதலில் கமலின் இளமை ஊஞ்சல் ஆடுகிறது படம் வெற்றி கண்டது.

2.தப்புத்தாளங்கள் Vs சிவப்பு ரோஜா

இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான படம் தப்புத் தாளங்கள்.இப்படத்தில் ரஜினி,சரிதா,சுந்தர் ராஜ்,பிரமிளா ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார்.தீபாவளி முன்னிட்டு வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லை.

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியான படம் சிவப்பு ரோஜா.இப்படத்தில் கமல்ஹாசன்,பாக்யராஜ்,ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த சிவப்பு ரோஜா படம் திரையரங்குகளில் வெளியாகி
175 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

இந்த மோதலில் கமலின் சிவப்பு ரோஜா படம் வெற்றி கண்டது.

3.குப்பத்து ராஜா Vs நீயா

இயக்குநர் ஆர்.ராமண்ணா இயக்கத்தில் கடந்த 1979 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியான படம் குப்பத்து ராஜா.இப்படத்தில் ரஜினி,பத்மபிரியா,விஜயகுமார்,மஞ்சுளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லை.

இயக்குநர் துரை இயக்கத்தில் கடந்த 1979 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியான படம் நீயா.இப்படத்தில் கமல்ஹாசன்,ஸ்ரீபிரியா,மஞ்சுளா,விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.நீயா படம் திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடி சூப்பர் ஹிட் படமாக கொண்டாடப்பட்டது.

இந்த மோதலில் கமலின் நீயா படம் வெற்றி கண்டது.

4.காளி Vs குரு

இயக்குநர் ஐ.வி.சசி இயக்கத்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான படம் காளி.இப்படத்தில் ரஜினிகாந்த்,சிரஞ்சீவி,ஜெயலட்சுமி,ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.மொத்தம் 56 நாட்கள் ஓடிய இப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.

இயக்குநர் ஐ.வி.சசி இயக்கத்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி வெளியான படம் குரு.இப்படத்தில் கமல்ஹாசன்,ஸ்ரீதேவி,ஆர்.முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.குரு படம் திரையரங்குகளில் வெளியாகி 365 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடி பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.

இந்த மோதலில் கமலின் குரு படம் வெற்றி கண்டது.

5.நெற்றிக்கண் Vs சங்கர்லால்

இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான படம் நெற்றிக்கண்.இப்படத்தில் ரஜினிகாந்த்,மோகனா சுரேஷ்குமார்,விசு,சரத்பாபு
உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.இப்படம் கதை ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் டி.என்.பாலு இயக்கத்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான படம் சங்கர்லால். இப்படத்தில் கமல்ஹாசன்,ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு இளையராஜா மற்றும் கங்கை அமரன் இசையமைத்தனர்.இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லை.

இந்த மோதலில் ரஜினியின் நெற்றிக்கண் படம் வெற்றி கண்டது.

6.போக்கிரி ராஜா Vs வாழ்வே மாயம்

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த 1982 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியான படம் போக்கிரி ராஜா.இப்படத்தில் ரஜினிகாந்த்,ஸ்ரீதேவி,ராதிகா,மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.இப்படம் கதை ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் படமாக கொண்டாடப்பட்டது.

இயக்குநர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியான படம் வாழ்வே மாயம்.இப்படத்தில் கமல்ஹாசன்,ஸ்ரீதேவி,ஸ்ரீபிரியா,ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.இப்படம் கதை ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.

இந்த மோதலில் கமலின் வாழ்வே மாயம் படம் வெற்றி கண்டது.

7.நல்லவனுக்கு நல்லவன் Vs எனக்குள் ஒருவன்

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான படம் நல்லவனுக்கு நல்லவன்.இப்படத்தில் ரஜினிகாந்த்,விசு,ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.இப்படம் திரையரங்குகளில் 150 நாட்களுக்கும் மேல் ஓடி சூப்பர் ஹிட் படமாக கொண்டாடப்பட்டது.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி வெளியான படம் எனக்குள் ஒருவன்.இப்படத்தில் கமல்ஹாசன்,ஷோபனா,ஸ்ரீபிரியா,மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லை.

இந்த மோதலில் ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் படம் வெற்றி கண்டது.

8.தளபதி Vs குணா

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான படம் தளபதி. இப்படத்தில் ரஜினிகாந்த்,மம்மூட்டி,ஷோபனா,ஸ்ரீவித்யா,அரவிந்த்சாமி,பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.இப்படம் திரையரங்குகளில் 150 நாட்களுக்கும் மேல் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இயக்குநர் சந்தான பாரதி இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான படம் குணா.இப்படத்தில் கமல்ஹாசன்,ரோஷினி,ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லை.

இந்த மோதலில் ரஜினியின் தளபதி படம் வெற்றி கண்டது.

இதேபோல் ரஜினியின் முத்து மற்றும் கமலின் குருதிப்புனல் அதேபோல் ரஜினியின் சந்திரமுகி மற்றும் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்கள் மோதி கொண்டதில் ரஜினியின் முத்து மற்றும் சந்திரமுகி படம் வெற்றி கண்டது.