சரியான வருமானம் இல்லாததால் அப்படி ஒரு தொழில் செய்த துணை நடிகர்! அதிரடி காட்டிய போலீஸார்!
கஞ்சா அல்லது போதைப்பொருள் என்றாலே நைஜீரியாவை சேர்ந்த சிலர் தான் அந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று சொல்வோம். அங்கிருந்து வந்த ஒரு கலாசாரம் தான் அது என்றும் ஒரு தகவல் பலரால் சொல்லப் படுகிறது. அப்படி நைஜீரியாவை சேர்ந்த காக்வின் மெல்வின் என்ற நபர் சிங்கம் 2 படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஒருவராக நடித்தவர்.
நாம் பெரும்பாலும் படங்களில் எல்லாம் போதைப்பொருள் கும்பலாக நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு கும்பலை தான் காட்டுவார்கள். அப்படி ஒரு கதாபாத்திரமாக நடித்த நபர்தான் இவர். இவர் சிங்கம் 2 படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் இதே போதைப்பொருள் கும்பல் நபர்களில் ஒருவராகவும், கடத்தல், கதாபாத்திரங்களிலுமே அவர் நடித்துள்ளார்.
தமிழில் விஸ்வரூபம் சிங்கம் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார். இவருக்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் எனவே மும்பையிலுள்ள நியூ ஃபிலிம் அகாடமியின் மூலம் சில ஆண்டுகள் நடிப்பு பயிற்சி மேற்கொண்டுள்ளார். பின்னர் பெங்களூரில் தங்கி தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வந்தார். அப்படி அவர் தமிழில் நடித்த படம் தான் சிங்கம் 2. நடிகர் சூர்யாவின் சிங்கம் 2 படத்திலும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனின் கூட்டாளியாக அவர் நடித்து இருப்பார்.
தற்போது நடிப்பு தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததின், காரணமாக அவர் தனது நிழல் கதாபாத்திரத்தை நிஜமாக்க நினைத்து பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். மேலும் அவர் தனக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த போதைப் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். அதன் காரணமாக இவரை சில வாரங்களுக்கு முன்பு பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவரை கைது செய்துள்ளனர்.
அந்த கும்பல் காக்வின் தான் மாணவர்களுக்கு போதைப் பொருளை விற்கிறார் என்பது போலீசில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெங்களூர் டெல்லி போலீசார் காக்வின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டிலிருந்து போதைப்பொருட்கள், கச்சா எண்ணெய் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இதன் மதிப்பு மட்டும் சுமார் 8 லட்சம் வரை இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இது தவிர ஐந்தாயிரம் பணமாகவும், ஒரு கைப்பேசி ஆகியவற்றையும், அவரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவர் மூலம் சினிமா பிரபலங்களுங்களுக்கும் போதை பொருட்களை தந்தாரா? யாரேனும் பயன்படுத்தினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.