விரைவில் ஓய்வு பெறுகிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லலித்! அடுத்த தலைமை நீதிபதி யார் தெரியுமா?

0
116

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது லலித் பதவி வகித்து வருகிறார். இவர் வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி உடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்யுமாறு தலைமை நீதிபதி லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.

ஓய்வு பெற உள்ள தலைமை நீதிபதி தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்வது வழக்கம். அதன் அடிப்படையில் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திர சூட்டை நியமனம் செய்வதற்கான பரிந்துரை கடிதத்தை இன்று தலைமை நீதிபதி சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக வரும் நவம்பர் மாதம் 9ம் தேதி பதவி ஏற்க உள்ள சந்திர சூட் உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி என்ற சிறப்பை பெற்றுள்ளார். இவர் வரும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி வரையில் அந்த பொறுப்பில் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.