அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது! 17 மாதங்களுக்குப் பிறகு நேரடி விசாரணையில் இறங்கிய உச்சநீதிமன்றம்!

0
125

நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததன் காரணமாக, உச்சநீதிமன்றத்தில் சுமார் 17 மாதங்களுக்குப் பின்னர் குறிப்பிட்ட சில வழக்குகள் மீதான விசாரணை மட்டும் இன்றைய தினம் முதல் நேரடியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் ஆரம்பத்தில் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க ஆரம்பமானது. இதனை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற வழக்குகள் காணொளி மூலமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.

தற்சமயம் நோய்த்தொற்று பரவல் குறைந்திருப்பதை தொடர்ந்து விசாரணையை நேரடியாக நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. இதனை பரிசீலனை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குழு முதல்கட்டமாக குறிப்பிட்ட ஒரு சில விளக்கங்களை மட்டும் நேரடியாக விசாரணை செய்யலாம் என்று பரிந்துரை செய்தது.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி என் வி ரமணா தெரிவித்துள்ளார். அதேசமயம் காணொளி மூலமாக விசாரணையில் பங்கேற்க விரும்பும் வழக்கறிஞர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நோய்த்தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகளை நிச்சயமாக பின்பற்ற வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதனடிப்படையில் ஒரு அறையில் இருபதுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டிய வழக்குகள் மீதான விசாரணையை நேரடியாக நடத்த அனுமதி கிடையாது. காணொளி மூலமாக தான் விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை நேரடியாக ஆஜராக விரும்பினால் ஒரு தரப்புக்கு ஒரு வழக்கறிஞர் அல்லது அவருடைய பதில் நபர் ஒரு வாதாடும் வழக்கறிஞர் மற்றும் ஒரு இளம் வழக்கறிஞர் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் இவ்வாறு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.