ஆண்களுக்கு நிகராக பெண்களால் பணியாற்ற முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

0
134

ஆண்களுக்கு நிகராக பெண்களால் பணியாற்ற முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களால் பணியாற்ற முடியும், அவர்களை கமாண்டர்களாக நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது.

நவீன காலத்தில் பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்கிற நிலை உருவாகியுள்ளது. இந்திய ராணுவ பாதுகாப்பு படைகளில் ஆண் பெண் என்ற பாகுபாடு பார்க்கப்படுவதாக பேச்சு எழுந்தது. இதையடுத்து மூத்த வழக்கறிஞர்கள் இராணுவ உயர் பதவிகளில் பெண்களையும் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு குறித்து, பெண்களுக்கு ஏன் கமாண்டர் பதவி தரக்கூடாது என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் முன்பு அதிரடியாக கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, ஆண்களின் உடல் வலிமைக்கு ஈடாக கடுமையான பணிகளை பெண்களால் செய்ய முடியாது என்று பதில் கூறியிருந்தது.

இவ்வழக்கு குறித்த விசாரணையில், மத்திய அரசின் பதிலை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ராணுவத்தில் பெண்களை கமாண்டர்களாக நியமிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் மத்திய அரசு பெண்களை மதிக்காமல் அவமதித்துள்ளதாகவும் கருத்து கூறியுள்ளார் மேலும், ராணுவத்தில் பணியாற்றும் பெண்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.