மாநில தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்! இது நடக்கும் போது அது நடக்க கூடாதா?
தமிழகத்தில் தற்போது சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. எனவே அந்த ஒன்பது மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக முடிவு செய்த நிலையில், தேர்தல் நடத்துவதற்காக கால அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நீதி மன்றத்தில் நடந்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், தேர்தல் ஆணையத்திடம் இவ்வாறெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்தும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மட்டும் ஏன் நடத்த முடியவில்லை என கேட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாதங்கள் எல்லாம் அவகாசம் வழங்க முடியாது என்றும், ஏன் தேர்தலை நடத்த என்ன பிரச்சனை என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
அதற்கு மாநில தேர்தல் ஆணையம் சில தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. ஆகவே தான் அவகாசம் கேட்கின்றோம். தற்போது அந்த ஏழு மாத அவகாசம் கூட தேவையில்லை. ஒரு 3 முதல் 4 மாத கால அவகாசம் இருந்தால் போதுமானது என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறி உள்ளது.