Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லிவிங் டு கெதர் வாழ்வது தவறல்ல உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

லிவிங் டு கெதர் வாழ்வது தவறல்ல உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

சில காலம் முன் திருமணம் செய்து கொண்டு வேறு ஒரு உறவு வைத்துக்கொள்வது தவறு அல்ல என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.இந்த சட்டம் நம் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தது.இதனையடுத்து இந்த சட்டமானது மக்களிடயே முகம் சுளிக்க வைத்தது.

இதனையடுத்து லிவிங் டு கெதர் எனப்படும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் வாழ்க்கையை கால் சென்டர்,ஐடி ஊழியர்கள் என ஆரமித்து இக்கால இளையர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் திருமண ஒத்திகை பார்ப்பது போல் சேர்ந்து வாழ்கின்றனர்.இது அனைத்து இடங்களிலும் அதிக அளவு நடக்கின்றது.அந்தவகையில் கால் சென்டர் பணியில் வேலை பார்க்கும் பெண் மற்றும் ஆண் இவர்கள் இரண்டு பேரும் லிவிங் டு கெதர் எனப்படும் திருமண ஒத்திகையாக 5 வருடம் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு வேற ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.ஆகையால் இவர் கூட லிவிங் டு கெதரில் வாழ்ந்த பெண் இவர் மீது வழக்கு ஒன்று தொடுத்தார்.அதில் அந்த பெண் கூறியது,எனதுடன்  5 வருடம் லிவிங் டு கெதரில் சேர்ந்து வாழ்ந்து விட்டு திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி என்னை ஏமாற்றி வாழ்ந்தது பலாத்காரம் செய்ததற்கு ஈடாகும் என கூறியிருந்தார்.

ஆகையால் இவர் மீது பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு போட வேண்டும் எனக்  கூறினார்.இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் இந்த வழக்கு விசாரித்து வந்தது.இந்த வழக்கில் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் கலந்துள்ளனர்.கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அந்த கால் சென்டர் இளைஞர் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் விபா தத்தா மகிஜா கூறியது,சேர்ந்து வாழும் போது இருவரும் ஒரு மன கோட்பாட்டில்  இருந்ததால் அது பலாத்கரம் செய்ததாக கூறப்படுவது தவறு என வாதாடினார்.

அதன்பின் அந்த இளம்பெண்னின் வழக்கறிஞர் ஆதித்ய வசிஷிட் வாதாடும்போது கணவன் மனைவியாக வாழ அந்த இளைஞர் ஒப்புக்கொன்டுள்ளார்.அதன்பின் கோவிலில் திருமணம் செய்து கொண்டு அந்த பெண்ணை துன்புறுத்தியுள்ளார்.பணத்தையும் பரித்துகொண்டார்.இவர் செய்தது பலாத்காரம் செய்ததாகும்.அது மட்டுமின்றி திருமணம் செய்து கொள்வேன் என வாக்குறுதி அளித்தது மிகவும் குற்றமாகும் என கூறினார்.

அதற்கு எதிர் தரப்பினர் இரண்டு பேரும் சமரச முடிவிலே லிவிங் டு கெதரில் சேர்ந்து வாழ்ந்தனர்.ஆகையால் பலாத்காரம் செய்ததாக கூறுவது மிகவும் தவறானது எனக் கூறினார்.இதை விசாரித்த நீதிபதி கூறியது,ஆசை வார்த்தைகளை கூறி கல்யாணம் செய்து கொள்வேன் என வாக்குகொடுத்தது மிகவும் குற்றமாகும்.அதுமட்டுமின்றி கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த 2 வழக்குகளிலும் சேர்ந்து வாழும் போது இருவரும் ஒரு மித கருத்துடன் உறவு கொள்வதை பலாத்காரம் எனக் கூறுவது மிகவும் கடினம் ஆகும்.பலாத்காரம் மற்றும் ஒரு மித உறவு இவை இரண்டுக்கும் தெளிவான வேறுபாடு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Exit mobile version