Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீட் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகாமை வெளியிட்ட அறிக்கை

அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ,தேசிய தேர்வு முகமை சார்பில் பதில் மனு தற்போது அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்ட மே மாதம் நடக்க இருந்தது.அப்பொழுது தேர்வு எழுதும் மையம் பிற மாவட்டங்களில் இருந்தால் மாற்றி அமைக்கும் முறையை அப்பொழுது கொண்டு வந்து, மே மாதம் 15-ம் தேதி நடக்க ஆயத்தமானது.ஆனால் மே மாதம் கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளதால் தேர்வு நடத்த இயலாத சூழ்நிலை வந்தது.இந்த தேர்வினை நிச்சயமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தேர்வு நடத்துவதற்கான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தேர்வினை ஆன்லைன் மூலமாக நடத்த வேண்டும் என வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆன்லைன் மூலமாக தேர்வினை நடத்த இயலாது என தேசிய தேர்வு முகாமை திட்டவட்டமாக கூறியுள்ளது.

இந்திய நாட்டு மக்களின் சமநிலை கொண்டோம், தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் மற்றும் விடைகள் எழுத்து பூர்வமாகவே அமைய வேண்டும் என்றும் தேசிய தேர்வு மையம் கூறியுள்ளது.இதனை ஆன்லைன் மூலமாக நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று என்று தேசிய தேர்வு முகாமை கூறியுள்ளது.

Exit mobile version