பட்டாசு உற்பத்தியாளர்களின் நினைப்பில் மண்ணை போட்ட உச்சநீதிமன்றம்!

0
134

நாடு முழுவதும் எப்படி வரும் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்ட உள்ளது விபத்துக்கள் இல்லாத தீபாவளி மற்றும் நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்களுக்காக, பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டுமென்று தெரிவித்தும், பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்றும், தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம் ஆர் சி மற்றும் ஏ எஸ் போபண்ணா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு சில முக்கிய தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது.

இந்த வழக்கு நேற்றையதினம் மறுபடியும் விசாரணைக்கு வந்தது அந்த சமயத்தில் விதியை மீறி பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படவில்லை எனவும், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பட்டாசுகளை தயாரிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, பட்டாசுக்கு தடை விதிக்கக் கூடாது என்று உற்பத்தியாளர்கள் தரப்பின் வாதம் செய்யப்பட்டது.

அந்த சமயத்தில் குறுக்கிட்ட நீதிபதிகள் பட்டாசு உற்பத்தியில் பல விதிமீறல்கள் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்கள் மேலும் முழு பட்டாசுகளுக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்தார்கள்.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் 21 ஆவது பிரிவின்படி அடுத்தவர்களின் ஆரோக்கியத்திற்கான உரிமையை பாதிக்கும் விதத்தில் கண்மூடித்தனமாக பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க இயலாது. பண்டிகை என்ற பெயரில் அடுத்தவர்களின் உயிருடன் விளையாடுவதற்கு யாரையும் அனுமதிக்க இயலாது. இதனால் பேரியம் நைட்ரேட் பாதரசம் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கொண்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி பட்டாசுகளை விற்பதற்கும், வெடிக்கவும், தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்கள்.

அதோடு உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அமல்படுத்த தவறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட பட்டாசுகள் உற்பத்தி பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் தொடர்பாக மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

பட்டாசுகளை வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க மறுத்த நீதிபதிகள் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை நவம்பர் மாதம் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பட்டாசு தயாரிப்பாளர்கள் இடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இதனையடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பிறப்பித்த உத்தரவின் பெயரில் பொது மக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பேரின் உப்பு கலந்த பட்டாசுகள் மற்றும் சரவெடி உள்ளிட்ட பட்டாசுகளை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவும், தடை விதிக்கப்பட்டு இருக்கிறது இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி நடப்போர் மீது அரசு விதிமுறைகளின் அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் தீபாவளி ஆரம்பித்து ஆங்கிலப்புத்தாண்டு வரையிலான பண்டிகை காலங்களில் பட்டாசுகள் விற்க மற்றும் வெடிப்பதற்கு முற்றிலுமாக தடை விதித்து கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.