செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!! 

0
104

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!! 

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி வழக்கின் விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.

சட்டவிரோதமாக பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஹை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதனால் 3- வது நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தீவிர விசாரணைக்கு பின்பு மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பில் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது தான். ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கது அல்ல. அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார். இன்று இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை செய்த நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில்  எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒத்தி வைத்துள்ளது.

எனவே வழக்கின் அடுத்த விசாரணை வரையில் எந்தவித நடவடிக்கை எடுக்க கூடாது என்று அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.