Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை! அதிரடியில் இறங்கிய உச்சநீதிமன்றம்!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் காலையில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்த மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவிலேயே அதிர்வலைகளை உண்டாக்கியது.

இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியின் மூலமாக நெய்வெளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஒவ்வொரு வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் லக்கன் குமார் வர்மா, அவருடைய நண்பர் ராகுல் வர்மா, ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதி கொலை செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. நீதித்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது பல தாக்குதல்கள் நடந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் நீதி துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உச்ச நீதிமன்றம் விருப்பம் கொண்டிருக்கிறதே என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

நீதிபதி உத்தம் ஆனந்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்தில் மாநிலம் முழுவதும் இருக்கின்ற நீதித்துறை அதிகாரிகள் தங்களுடைய வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எரியும் கருப்பு மெழுகுவர்த்தியின் புகைப்படத்தை முகப்பு படமாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது

Exit mobile version