Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆண்மையை தட்டி எழுப்பும் சூரணம்!! இதை பாலில் கலந்து குடித்தால் வீரியம் குறையாது!!

Surana that awakens masculinity!! Drinking this mixed with milk will not reduce the potency!!

Surana that awakens masculinity!! Drinking this mixed with milk will not reduce the potency!!

ஆண்மையை தட்டி எழுப்பும் சூரணம்!! இதை பாலில் கலந்து குடித்தால் வீரியம் குறையாது!!

இன்று அதிகமான ஆண்கள் ஆண்மை குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.ஆண்களின் வலிமையை காட்டும் ஆண்மை குறைந்தால் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது.எனவே ஆண்மையை அதிகரித்து தாம்பத்தியத்தில் முழு இன்பம் பெற பாலுணர்வை தூண்டும் வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)அஸ்வகந்தா சூரணம்
2)பசும் பால்
3)பனங்கற்கண்டு

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 200 மில்லி பால் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு இதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 3 நிமிடங்களுக்கு காய்ச்ச வேண்டும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி அஸ்வகந்தா பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து கலக்க வேண்டும்.அதன் பின்னர் சுவைக்காக சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி குடித்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி
2)பசும்பால்
3)தேன்

செய்முறை:-

நாட்டு மருந்து கடையில் கிடைக்க கூடிய தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி வாங்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி சேர்த்து கலக்க வேண்டும்.பிறகு சிறிது தேன் சேர்த்து கலக்கி பருகி வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கடுக்காய் பொடி
2)சீரகப் பொடி
3)வசம்புப் பொடி

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 250 மில்லி பால் ஊற்றி குறைவான தீயில் 150 மில்லி வரும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்.

பிறகு அதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி அரை ஸ்பூன் கடுக்காய் பொடி,கால் ஸ்பூன் சீர்கப் பொடி மற்றும் கால் ஸ்பூன் வசம்புப் பொடி சேர்த்து பருகி வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம்
2)பிஸ்தா
3)கெட்டி பால்

செய்முறை:-

கடாயில் 10 பாதாம் மற்றும் 10 முந்திரி பருப்பு சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் அளவிற்கு வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து கெட்டியான பால் 1/4 லிட்டர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி அரைத்த பாதாம் மற்றும் பிஸ்தா பொடியை சேர்த்து கலக்கி குடித்து வர ஆண்மை குறைபாட்டிற்கு தீர்வு கிடைக்கும்.

Exit mobile version