Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எந்த சளி, காய்ச்சலும் பக்கத்தில் அண்டாது! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!

கொரோனா காலகட்டத்தில் சாதாரண காய்ச்சல் சளி என்றாலும் மக்கள் பயந்து நடுங்குகின்றனர். சாதாரணமான சளி காய்ச்சலுக்கு வீட்டில் இருந்து எப்படி சரி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு. காய்ச்சலும் இருமலும் தீர டாக்டரிடம் சென்று செலவு செய்யாமல் வீட்டிலேயே இந்த ஆறு பொருட்கள் இருந்தால் எந்த விதமான காய்ச்சலையும் நொடியில் போக்கிவிடும் பானத்தை நீங்களே தயார் செய்யலாம்.

 

தேவையான பொருட்கள்:

1. மிளகு -10

2. துளசி இலை -ஒரு கைப்பிடி

3. சுக்கு- ஒரு துண்டு

4. திப்பிலி- 3

5. தனியா- 50 கிராம்

6. பனை வெல்லம்- தேவையான அளவு

 

செய்முறை:

 

1. முதலில் ஒரு சிறிய உரலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் மிளகு, துளசி, சுக்கு, திப்பிலி, தனியா ஆகியவற்றை சேர்த்து நன்றாக தட்டி கொள்ளவும்.

3. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

4. அந்த தண்ணீரில் தட்டி வைத்த பொருட்களை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

5. 5 நிமிடம் நன்கு கொதித்ததும் பனை வெல்லத்தை சுவைக்கேற்ப தேவையான அளவு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

6. நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.

7. இதனை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை 100 மில்லி அளவில் சாப்பிட்டு வர எந்த விதமான காய்ச்சலும் அண்டாது.

8. இந்த முறைப்படி நீங்கள் இந்த பானத்தை அருந்துவதால், காய்ச்சலும்‌,சளியும் உடனடியாக தீரும்.

Exit mobile version