Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை!! அதிசயத்தை நிகழ்த்தி காட்டி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!!

#image_title

கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை!! அதிசயத்தை நிகழ்த்தி காட்டி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!!

அமெரிக்காவில் மருத்துவர்கள் அதிசியமாக நம்ப முடியாத அளவிற்கு ஒரு அரிய அறுவை சிகிச்சையை செய்து முடித்து சாதனை படைத்துள்ளனர்.

இத்தனை ஆண்டுகள் அறுவை சிகிச்சை என்பது உடலுக்கு வெளியேயும் உடலுக்கு உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கும் செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து அதிசயத்தை நிகழ்த்தி காட்டியுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள்.

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் தான் இந்த அரிய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. கருவில் இருக்கும் சிறிய குழந்தைக்கு கருவில் இருந்தபடியே இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் ஒரு மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு மூளையில் இருந்து இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை. இதன் காரணமாக குழந்தை பிறந்த பிறகு பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த குழந்தைக்கு கருவிலேயே அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version