Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

170 கோடி சொத்து மதிப்பு கொண்ட சூரியா பட நடிகர்… யாரு இவர்தானா அந்த நடிகர்…!

170 கோடி சொத்து மதிப்பு கொண்ட சூரியா பட நடிகர்… யாரு இவர்தானா அந்த நடிகர்…
நடிகர் சூரியா நடித்த அஞ்சான் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனக்கு 170 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் சூரியா நடிகை சமந்தா நடிப்பில் 2014ம் ஆண்டு அஞ்சான் திரைப்படம் வெளியானது. இயக்குநர் லிங்குசாமி அஞ்சான் திரைப்படத்தை இயக்கியிருந்தார். நடிகர் வித்யுத் ஜம்வால், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். அஞ்சான் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
அஞ்சான் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் மனோஜ் பாஜ்பாய். இவர்தான் தற்பொழுது 170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்த பேமிலி மேன், ஃபார்ஜி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகர் மனோஜ் பாஜ்பாய் இதுவரை அவருடைய சிறப்பான நடிப்பிற்காக 3 தேசிய விருதுகளை வென்றுள்ளார். 54 வயதாகும் நடிகர் மனோஜ் பாஜ்பாய் அவர்கள் கமர்ஷியல் படங்களை விட நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ‘இரவு உணவு சாப்பிட்டு 13-14 வருடங்கள் ஆனதென’ என்று நேர்காணல் ஒன்று அளித்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
அந்த நேர்காணலில் உங்களுக்கு தற்பொழுது 170 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அழித்த நடிகர் மனோஜ் பாஜ்பாய் அவர்கள் “நான் செய்யும் இந்த வேலையை வைத்துக் கொண்டு இவ்வளவு சொத்து சம்பாதிக்க முடியாது. நான் எனது வங்கியின் சேமிப்பு கணக்கில் பணத்தை சேமிக்க இன்னும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன். இதையெல்லாம் பார்த்த பிறகு எனது தயாரிப்பாளர்கள் என்னுடைய சம்பளத்தை உயர்த்தினால் நன்றாக இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். தற்பெழுது நடிகர் மனோஜ் பாஜ்பாய் அவர்கள் டெஸ்பேஜ், ஜோரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Exit mobile version