Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“ஆணவத்தில் ஆடினா, அழிந்து போயிடுவ” யாரை சூர்யா திட்டினார்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சூர்யா, அண்மையில் தனது பிறந்தநாளை கோலாகலமாக ரசிகர்களுடன் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வந்தனர்.

அதேசமயம் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி கதாநாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயன், சூர்யாவுக்கு வாழ்த்து சொல்ல தவறிவிட்டா.ர்.

சிவகார்த்திகேயன் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு தனுஷ் தான் காரணம் என்பதால்தான், அவருடைய பிறந்த நாளுக்கு மட்டும் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் “ஒரு கோடி” நிகழ்ச்சியில் சூர்யா, சிவகார்த்திகேயன் ஹீரோ ஆனதற்கு,பெருமிதம் கொண்டதாகவும், இருந்தபோதிலும் சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல தவறி விட்டதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் கொந்தளித்த சூர்யா ரசிகர்கள், சிவகார்த்திகேயனை கழுவி கழுவி ஊதியது மட்டுமல்லாமல், “ஆணவத்தில் ஆடக் கூடாது எனவும், ஒரு சில படங்கள் பிளாப் ஆனால் நீயும் நடுரோட்டுக்கு தான் வந்தாக வேண்டும்” எனவும் ஒருமையில் பேசி வருகின்றனர்.

சமூக வலைதளங்கள் வாயிலாக, இதற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருக்கிறனர்.

Exit mobile version