தீபாவளி முடிச்சுட்டு அடுத்த கட்ட ஷூட்டுக்கு தயாராகும் சூர்யா 42 குழு!

0
203

தீபாவளி முடிச்சுட்டு அடுத்த கட்ட ஷூட்டுக்கு தயாராகும் சூர்யா 42 குழு!

சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் சிவா, பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் ஆன படத்தைத் தொடங்க உள்ளார். சில மாதங்களாக இந்த படத்தின் திரைக்கதைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த படத்தில் திஷா பட்டானி கதாநாயகியாக நடிக்க, வெற்றி ஒளிப்பதிவாளராக பணியாற்ற, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். வரலாற்றுப் படமாக இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “இந்த படம் ஒரு பேன் இந்தியா படமாக 10 மொழிகளில் ரிலீஸ் ஆகும்” எனக் கூறியுள்ளார்.

இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சென்னையிலும், கோவாவிலும் சில நாட்கள் நடந்தது. இந்நிலையில் தீபாவளி முடிந்ததும், அடுத்த கட்ட ஷூட்டிங் மீண்டும் கோவாவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் நிகழ்காலம் மற்றும் பல நூறாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு களங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய படமும் பாதி  முடிக்கப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.