நிதி அமைச்சர் வழங்கிய சர்ப்ரைஸ்! 5 மாவட்டங்களுக்கு இலவச வைஃபை சேவை!

0
292
#image_title

நிதி அமைச்சர் வழங்கிய சர்ப்ரைஸ்!
5 மாவட்டங்களுக்கு இலவச வைஃபை சேவை!

சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024 – 25 க்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

சென்னையில் சாலைகள் அகலப்படுத்தும் திட்டம்

முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.

தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி மற்றும் உந்து சக்தி பூங்கா.

500க்கும் அதிகமாக பெண்கள் மாற்றுத்திறனாளிகள் மூன்றாம் பாலினத்தவரை பணிக்கு அமர்த்த வேண்டும்.

தமிழகத்தில் புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும்.

காவிரி, நொய்யல், வைகை, தாமிரபரணி நதிகளை புனரமைக்க புதிய திட்டம்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு.

ஐந்து மாவட்டங்களுக்கு இலவச வைஃபை திட்டம்.

நாமக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.358 கோடி ஒதுக்கீடு.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 வழங்க திட்டம்.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக ரூ.12000 கோடி நிதி ஒதுக்கீடு.

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 4725 கோடி நிதி ஒதுக்கீடு.

மெரினா உள்ளிட்ட சுற்றுலா கடற்கரைகளை மேம்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு.

மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்திற்கு ரூ. 3050 கோடி ஒதுக்கீடு.

அரசு பள்ளிகளில் ரூ 1000 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் புதிய வகுப்பறைகள்.

ஆவின் பால் தரத்தை உறுதி செய்திட ரூ.21 கோடி மதிப்பீட்டில் நவீன கருவிகள்.

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசே நடத்த வேண்டும்.