Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்னது இவர் நடிகை வனிதாவிற்கு சொந்தக்காரரா?

நடிகர் விஜயகுமாருக்கும் அவரது இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளாவிற்கும் மூத்த மகளான நடிகை வனிதா தற்பொழுது பெரும் பரபரப்பை இணையத்தில் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளார்.

இவர் பிக் பாஸ் இன் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்தது மிகவும் பிரபலமானார்.
இவர் தனது சொந்த விஷயங்களில் தலையிடும் பிரபலங்களையும் இணையத்தில் விளாசி வருகிறார். இவர் மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருந்தாலும் தனது கடைசி இரு மகள்களுடன் மட்டுமே தற்போது சேர்ந்து வாழ்கிறார். இவருக்கு கடந்த இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்ததால் தற்பொழுது பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் அவருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அவர் தனது முதல் மனைவியுடன் விவாகரத்து பெறாத நிலையில் நடிகை வனிதாவை திருமணம் செய்துள்ளதால் பல சர்ச்சைகளுக்கு இவர்கள் உள்ளாகியுள்ளனர்.

இதில் தலையிட்ட பிரபலங்களையும் நடிகை வனிதா வார்த்தைகளால் விளாசியும் இணையத்தில் மிகவும் வைரல் ஆகினார்.

இந்நிலையில் நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மூத்த மனைவிக்கும் ஒரே மகன் நடிகர் அருண்விஜய். இவர் நடிகை வனிதாவிற்கு அண்ணன் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனாலும் அருண் விஜய் நடிகர் விஜயகுமாரின் மூத்த தாரத்தின் மகன் ஆவார்.

இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் சின்னத்திரையின் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுவார். இவர் சன் தொலைக்காட்சியில் நடித்த திருமதி செல்வம் என்னும் நாடகம் 6 ஆண்டுகள் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இவர் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி என்னும் நாடகத்திலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார்.இவரும் நடிகை வனிதா விற்கு மிக நெருங்கிய சொந்தக்காரர் ஆவார். நடிகை வனிதாவின் தாயார் பழம்பெரும் நடிகையான மஞ்சுளா விஜயகுமார் அவர்களின் அக்கா மகன் தான் நடிகர் சஞ்சீவ். எனவே இவரும் நடிகை வனிதாவிற்கு சகோதரர் ஆவார்.

இது மக்களிடம் அவ்வளவு வெளிப்படையாக தெரியாத ஒரு செய்தியாகும்.

Exit mobile version