தற்பொழுது கொரோனாவின் காரணத்தால் ஊரடங்கினால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கிடையே கோவையில் புதுமண தம்பதியர் ஹெலிகாப்டர் டாக்சியை வாடகைக்கு எடுத்து ஊரை சுற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து திருமணத்திற்கான கொண்டாட்டங்களை மேற்கொண்டனர். வானில் வட்டமிட்டபடி இவர்கள் செய்த இந்த செயல் மக்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோவை மாவட்டத்தில் புதுமண தம்பதியர் 30 நிமிடத்திற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அவர்கள் குடும்பத்துடன் தங்களுக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகில் உள்ள ஈஷா யோகா மையத்தை வானில் இருந்தபடி கண்டுகளித்தனர்.
இந்த குடும்பம் இணையத்தில் பிளானட் எக்ஸ்பிரஸ் என்னும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இந்த சேவைக்கான கட்டணத்தை செலுத்தி பின்னர் வாடகைக்கு எடுத்தனர். இந்த ஹெலிகாப்டர் துடியலூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் பிளானட் என்னும் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.
இது மட்டுமல்லாமல் இது மக்களின் சேவைக்காக வாடகைக்கும் தரப்படும். போட்டோக்கள் எடுக்க,ஊர் சுற்ற, திருமணத்திற்காக பூக்களை தூவ என நமது தேவைக்கு ஏற்ப நிறுவனம் கட்டணம் வசூலிக்கிறது.
போட்டோக்கள் எடுக்க ரூபாய் 20 ஆயிரமும் அதை ஒரு முறை பயணம் செய்ய வேண்டும் என்றால் ரூபாய் 75 ஆயிரமும் இதை இந்நிறுவனத்தால் வசூலிக்கப்படுகிறது. ஹெலிகாப்டரில் பயணம் செய்வதற்கு 5 பேரை இந்நிறுவனம் அனுமதிக்கிறது.
இந்த ஹெலிகாப்டரை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான சதீஷ் குமார் என்பவர் பராமரித்து வருகிறார். இவர் முறையான அரசு அனுமதி பெற்று தகுதியான பைலட்களை கொண்டு சேவையை வழங்கி வருவதாக கூறுகிறார்.
போட்டோக்கள் எடுக்க சுற்றுலா செல்ல போன்ற சேவைகள் மட்டுமல்லாமல் மருத்துவ சேவைகளான உறுப்புகளை கொண்டு செல்வதற்கும் இந்த ஹெலிகாப்டர் பயன்படுவதாக கூறுகிறார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சதீஷ்குமார்.
இந்த ஹெலிகாப்டர் டாக்ஸி நம் தமிழக மக்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.