Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சரணடைந்த ரஷ்ய வீரரை தாயுள்ளத்தோடு உபசரித்த உக்ரைனிய பெண்கள்!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் ரஷ்யா உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. அதற்கு முன்பாகவே ரஷ்யா தன்னுடைய படைகளை உக்ரைன் நாட்டு எல்லையில் குவித்தது.

இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது மேலும் ஐநா சபை, இந்தியா, உள்ளிட்ட நாடுகளும் தயவுசெய்து பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணுங்கள் என்று கோரிக்கை வைத்தது.ஆனாலும் இதனை ரஷ்யா ஏற்கவில்லை.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக ரஷ்யப் படைகள் உக்ரைனின் மீது மிக பயங்கர தாக்குதலை நிகழ்த்தி வருகின்றன. உக்ரைன் நாட்டு ராணுவமும் ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால் இரு தரப்புக்கும் உண்டான மோதலில் பலர் பலியாகி இருக்கிறார்கள்.இந்த நிலையில், ரஷ்ய வீரர் ஒருவர் தன்னுடைய ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு உக்ரைன் பொதுமக்களிடம் சரணடைந்தார்.

மிகவும் அச்சத்துடன் காணப்பட்ட அவருக்கு அந்த தாய்மார்கள் தேநீரும், உணவும், வழங்கி சாப்பிட தெரிவித்ததுடன் அவர் தன்னுடைய தாயுடன் பேசுவதற்கு தங்கள் கைபேசியை கொடுத்து உதவியிருக்கிறார்கள் .ஒரு பெண் கைபேசியை பிடித்துக்கொள்ள ஒரு கையில் தேநீரும் மறு கையில் ஒரு உணவுப் பண்டமும் வைத்திருக்கும் அந்த ரஷ்ய வீரர் கைபேசியில் தன்னுடைய தாயை கண்டவுடன் கண்ணீர்விட்டு கதறினார்.

மேலும் கதறி அழும் அவருடைய முதுகை தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவிக்கிறார்கள் அந்தப் பெண்மணிகள். அதோடு தொலைபேசியின் மறுமுனையில் தன்னுடைய மகனுடன் பேசும் அந்த தாய்க்கும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள் இந்த பெண்கள்.

ஒரு பெண் அந்த வீரரின் தாயிடம் நடாஷா கடவுள் உங்களுடன் இருப்பாராக உங்கள் மகன் உயிருடனும், நல்ல நிலையிலுமிருக்கிறார். மறுபடியும் உங்களுடன் பிறகு தொடர்பு கொள்கிறோம் என்று தெரிவிப்பதை அந்த வீடியோவில் காணலாம்.

அதோடு வீடியோவின் பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது இது இந்த இளைஞர்களின் தவறு அல்ல தாங்கள் எதற்காக உக்ரைன் வந்திருக்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் பழைய வரைபடங்களை வைத்திருக்கிறார்கள் திக்கு தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது அந்த குரல்.

இந்த வீடியோ டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது அதில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. ரஷ்ய வீரர்களே சரணடையுங்கள் உங்களை மக்கள் உங்களுக்கு வழிபாடுகள் இந்த வீடியோ ரஷ்யாவிலும் துறையிலும் வைரலாக தங்கள் நாட்டை ஊடுருவும் அதற்காக அந்த ராணுவ வீரர் மீது அவர்கள் காட்டும் இரக்கத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version