கர்ணன் படம் போல “சூர்யா 40” திரைப்பட போஸ்டர்!
கொரோனா காலக்கட்டத்தில் ஹாட்ஸ்டாரில் வெளிவந்த படம் தான் சூரரைபோற்று.இது உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.கொரோனா காலக்கட்டத்தில் வெளியானாலும் அதிக அளவு இப்படம் பிரபலமடைந்தது.சூர்யாவுக்கு அதிக புகழை பெற்று தந்தது.அந்தவகையில் சூர்யாவின் அடுத்தப்படம் தான் “சூர்யா 40”.
இந்த படத்தை பாண்டியராஜ் இயக்குகிறார்.சன் பிச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.இப்படம் ஆரமிக்கும் போதே சூர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.அந்த நேரத்தில் சூர்யா நடிக்கும் காட்சிகளை தவிர மற்ற காட்சிகளை படமாக எடுதுத்தனர்.
தற்போது கொரோனா தொற்று குணமடைந்த நிலையில் மீண்டும் சூர்யா நடிக்க உள்ளார்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் படபிடிப்பு குழுவில் கலந்துக்கொன்டுள்ளார்.இப்படத்திற்கு பெயர் ஏதும் வைக்காத காரணத்தினால் தற்காலிகமாக “சூர்யா 40” என்று அழைக்கப்பட்டு வருகிறது.தற்போது இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அந்தவகையில் சூர்யா வேட்டி சட்டையுடன்,கையில் பெரிய வாளுடன் போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது வலைத்தளத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இப்புகைப்படத்தை பார்க்கும் போது கர்ணன் படத்தில் தனுஷ் போஸ் கொடுத்ததை போலவே காட்சியளிக்கிறது.இப்புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூகவளைத்தலங்களில் அதிக அளவு ஷேர் செய்து வருகின்றனர்.