Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரிய பகவான் : இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஆபத்து!

கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரிய பகவான் : இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஆபத்து!

செப்டம்பர் மாதம் குரு வக்ர பெயர்ச்சி நடைபெறுகிறது. சூரிய பகவான் சிம்மத்திலிருந்து கன்னி ராசியில் பெயர்ச்சி செய்கிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களெல்லாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்று பார்ப்போம் –

மிதுனம்

செப்டம்பர் மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு வேலை தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு களைப்பு ஏற்படும். வியாபாரத்தில் தொடர்ந்து அலைச்சல் ஏற்படும். பணி சுமை கூடும். பணியில் சரியாக திட்டமிட்டு செயல்படுங்கள். குடும்பத்தில் சில சில பிரச்சினை ஏற்படும். இதனால் மனவருத்தப்படுவீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்

செப்டம்பர் மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், கடக ராசிக்காரர்களே நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப சூழ்நிலைகள் சங்கடங்களை ஏற்படுத்தும். வியாபாரத்தில் லாபம் குறையும். பணி செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி

செப்டம்பர் மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், கன்னி ராசிக்காரர்களே எந்த செயலிலும் கொஞ்சம் கவனமுடன் செயல்படுங்கள். வேலை செய்யும் இடத்தில் வேலை பளு அதிகரிக்கும். பணியிடத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கும். சுறுசுறுப்பாக வேலை செய்யுங்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். யாரையும் கேலி, கிண்டல் செய்யாதீர்கள். அப்படி செய்தீர்கள் என்றால், பிரச்சினை வந்து சேரும். காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது.

மகரம்

செப்டம்பர் மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மகர ராசிக்காரர்களே உங்களுக்கு நில விஷயங்களில் மன அமைதி கெடும். குடும்ப பிரச்சினை அதிகரிக்கும். பொருளாதார நிதி நிலை சரியாக இருக்கும். பணத்தை சேர்க்க முயற்சி செய்யுங்கள். எந்த விஷயத்திலும் அதிகமாக உணர்ச்சிவசப்படாதீர்கள்.  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உறவில் கவனம் தேவை.

மீனம்

செப்டம்பர் மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மீன ராசிக்காரர்களே உங்கள் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். குறிப்பாக, தொழிலில் மந்த நிலை ஏற்படும். அதனால் கூடுதலாக உழைக்க நேரிடும். சில நேரங்களில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கவனமாக இருங்கள். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில பிரச்சினைகள் ஏற்படும்.

Exit mobile version