Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா தொற்று உறுதியான நிலையில் மாயமான சூர்யாதேவி! 2 பிரிவுகளில் வழக்கு பதிவு.

நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கும் அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது..

பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சமூக வலைத்தளங்களிலும் பேசும் பொருளானது. பீட்டர் பாலும் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே வனிதாவை திருமணம் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டிக் டாக் பிரபலமான சூர்யா தேவி என்ற பெண், வனிதா விஜயகுமார் குறித்து கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சூர்யா தேவி மீது நடிகை வனிதா, வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அவரது இல்லத்திற்கு சுகாதாரத் துறையினர் சென்றுள்ளனர்.

அப்பொழுது அவர் மாயமானது தெரியவந்துள்ளது.அப்போது அவர் தலைமறைவாகி இருந்ததை அடுத்து சுகாதார ஆய்வாளர் ரமேஷ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து சூர்யா தேவி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Exit mobile version