Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இணையத்தை கலக்கும் சூர்யா ஜோதிகாவின் வைரல் வீடியோ!

Surya Jyotika's viral video mixing the internet!

Surya Jyotika's viral video mixing the internet!

இணையத்தை கலக்கும் சூர்யா ஜோதிகாவின் வைரல் வீடியோ!

சினிமா திரையுலகில் காதலித்து திருமணம் வாழ்க்கை வெற்றிகரமாக நடத்தும் ஜோடிகளில் சூர்யா ஜோதிகா மிகவும் பிரபலமானவர்கள். திருமணமாகி சில ஆண்டுகள் சிறை பக்கமே வராமல் இருந்த ஜோதிகா மகளிர் மட்டும் என ஆரம்பித்து பல பெண்கள் சார்பான படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படத்தை அவரது கணவரை தயாரித்தும் வருகிறார். தற்பொழுது சூர்யாவின் ஜெய் பீம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி வாகை சூடியது. இருப்பினும் பல தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகளும் வந்தது. இருப்பினும் படம் அமோக வெற்றியை கண்டது.

அப்படம் ஆனது உண்மை கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தற்பொழுது சூர்யா மற்றும் ஜோதிகா கொச்சி பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்குள்ள ராஜாஹ கடற்கரைக்கு சென்று ஆயுர்வேத யோகா போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்தி உள்ளனர். அதைப்பற்றி பிறருக்கு கூறும் வகையில் ஜோதிகா அவர்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு ஒன்றை அப்லோட் செய்து உள்ளார். அதில் ஜோதிகா கூறியது,ஆயுர் என்பது நமது வயதிற்கும் வேதா என்பது நமது அறிவுக்கும் முக்கியமான ஒன்று என கூறியுள்ளார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் உடல் மற்றும் மனதை சீராக வைத்ததற்கு இது முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி நாங்கள் இருபத்தியோரு நாட்கள் இந்த ராஜாஹ கடற்கரையில் செலவழித்துள்ளோம். இது முற்றிலும் மனநிறைவை கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.ஆயுர்வேதம் மற்றும் யோகாவை நம் அடுத்த தலைமுறைக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் எங்களை மனநிறைவுடன் பார்த்துக் கொண்ட ராஜா கடற்கரை மற்றும் கொச்சிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இவர் அப்லோட் செய்து உள்ள இந்த வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது. எனது ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து லைக் செய்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Exit mobile version