Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுஷாந்த் சிங்கின் இறுதி படமான தில் பேச்சாரா படத்தின் கடைசி சிங்கிள் பாடல்! ரிலீஸ் செய்த ஏ.ஆர். ரகுமான்!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அது குறித்து மும்பை போலீஸ் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அவர் இறுதியாக நடித்து வெளியான தில் பேச்சாரா படம் அண்மையில் OOT தளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த  நிலையில் அந்தப் படத்தின் கடைசி சிங்கிள் பாடலான  “நெவர் say குட் பை” என்ற பாடலை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு  ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஆண்டாண்டு காலம் அழுதாலும் மாண்டவர்கள் திரும்பப் போவதில்லை என்பதுதான் உண்மை என்பதற்கு இணங்க சுஷாந்த் சிங்ன் மறைவில் வாடும் ரசிகர்களுக்கு இந்த பாடல் மனநிம்மதியை தரும் என்று ஆஸ்கர் நாயகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Exit mobile version