Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவெஞ்சர்ஸ் படத்தின் சாதனையை முறியடித்த சுஷாந்த் பட டிரெய்லர்; உலகளவில் மாபெரும் சாதனை.!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி படத்தின் டிரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளது. ஜான் கிரீன் என்பவர் எழுதிய “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற நாவலை மையமாக கொண்டு உருவான படம் தில் பேச்சாரா. இப்படத்தின் கதாநாயகனாக சுஷாந்த்சிங், கதாநாயகியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். முகேஷ் சாப்ரா இயக்கத்தில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சுஷாந்த்திற்காக இப்படம் அனைவருக்கும் இலவசமாக வழங்குவதாக கூறியுள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி இணையத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பு அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படத்தின் டிரெய்லருக்கு 36 லட்சம் லைக்குகள் கிடைத்தது. தற்போது வெளியாகியுள்ள சுஷாந்த் படத்தின் டிரெய்லர் 60 லட்சம் லைக்குகள் மட்டுமல்லாது 24 மணி நேரத்தில் 2.94 கோடி பார்வையாளர்களை கடந்து உலகளவில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இந்திய அளவில் நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் லைக்குகளையும் சுஷாந்த்தின் “தில் பேச்சாரா” பட ட்ரெய்லர் முறியடித்துள்ளது. ரசிகர்களின் அன்பு மழையில் சுஷாந்த் பட ட்ரெய்லர் நனைவதாக ஏர்.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தோனியின் வரலாற்று படத்தில் நடித்த சுஷாந்த்சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14 ஆம் தேதி அவரது வீட்டில் இறந்துபோனது இந்திய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version