Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுஷ்மா சுவராஜ் கூறிய கடைசி வரிகள்! இதை எதிர்பார்த்தேன்! இவர்களுக்கு எனது நன்றிகள்!

சுஷ்மா சுவராஜ் முன்னாள் டெல்லி முதல் அமைச்சர் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆவார். இவர் உடல்நலக்குறைவால் அதிகாலை உயிரிழந்தார். அக்கட்சியினர் மற்றும் அவரை சார்ந்தோர் மீளா துயரத்தில் உள்ளனர். இதை அடுத்து சுஷ்மா சுவராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றினை ட்வீட் செய்திருந்தார்.

பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் கடந்த வருடம் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு அவ்வபோது அரசியல் பிரவேசம் செய்து வந்தார். இன்று அதிகாலை heart attack உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்.

முதலமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டவர். மிகவும் தயிரியமான பெண்மணிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர் இவர். பல்வேறு விவகாரங்கள் குறித்து அவ்வவ்போது ட்விட்டரில் கருத்துக்களையும், செய்திகளையும் பதிவிட்டு வந்தவர்.

இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக காஷ்மீர் மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. என்னுடைய வாழ்நாளில் இந்த தருணத்தை பார்ப்பதற்காகத் தான் காத்திருந்தேன்’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு முன்பாக நேற்றும், மாநிலங்களவையில் காஷ்மீர் மறுவரையறை மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து பேசியதற்கு வாழ்த்து தெரிவித்து சுஷ்மா சுவராஜ் ட்வீட் செய்திருந்தார்.

சுஷ்மா சுவராஜ் உடல் இன்று அடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அவரை பிரிந்து வாழும் மக்களுக்கு ஆறுதல் கூற முடியாமல் தவிக்கின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Exit mobile version